உறவுகளில் எந்த உறவு புனிதமானது என்று யாராவது சொல்ல முடியுமா-?எந்த உறவும் புனிதம் என்று தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாட முடியாது...சூழ்நிலைகள்தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கின்றன என்பததான் நிதர்சன உண்மை.
காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டு கடைசி வரை வாழ முடியாத பல ஜோடிகளை நாம பார்த்து இருக்கோம்.
பேப்பர்ல படிச்சி இருப்போம் காதலன் வீட்டு முன் காதலி அல்லது கர்பவதி காதலி தர்ணா... என்று படித்து இருப்போம்... அப்படி தர்ணா இருந்து அவனை திரும்பவும் கல்யாணம் செய்துக்கொண்டவனிடம் எப்படி மனம் விட்டு பேசி சிரிக்க முடியும்? எப்படி அவனை காதலுடன் பார்க்க முடியும்... ச்சி தூ என்று தன்னை ஒதுக்கியவனை எப்படி சேர்த்துக்கொள்ள முடியும்.... ---??? ஆனால் உலகம் பெரும்பாலான நேரங்களில் அப்படித்தான் இருக்கின்றது...
ச்சீ என்று ஒரு ஆண் சென்றாலோ... அல்லது பெண் சென்றாலோ? கெஞ்சிக்கொண்டு பின்னே செல்வது நடந்துக்கொண்டுதான் உள்ளது.... ஒரு கட்டத்துக்கு மேல் அது ஏற்ப்புடையது அல்ல என்பது என் கருத்து.....
விதி படத்துல சொல்லறது போல ஆண்களில் எல்லாரும் யோக்கியபுருஷர்கள் அல்ல... சின்சியராக காதலித்து விட்டு, வீட்டில் பிரச்சனை அதனால் வேறு கல்யாணம் செய்துக்கொண்டேன் என்று எத்தனை ஆண்கள் சொல்லி இருக்கின்றர்கள்... அப்படி பிரிந்த அத்தனை பெண்களும் போராட முற்பட்டால் தெரு தெருவாக பெண்கள் போராட்டதில் நிற்க வேண்டியதுதான்...
அன்பாய் பழகி விட்டு, உயிருக்கு உயிராய் பழகிவிட்டு, உடல் ரீதியாகவும் பழகிவிட்டு ஒரு ஆண் தனக்கு பிடிக்கவில்லை என்றாலோ.... ? அல்லது பெண் பிடிக்க வில்லை என்றாலோ... திரும்புவும் எனக்க வாழ்க்கை கொடு என்று மன்றாடி வாழும் அடிமை வாழ்க்கையில் எனக்கு உடன் பாடு இல்லை.... முடிந்த வரை சேர்ந்து வாழ முயற்சிப்போம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி போகும் போது நாம் அதில் இருந்து விடுவித்துக்கொள்வதுதான் சிறந்த வழி.
Lovers இரண்டு பேரில் ஏதோ ஒரு பிரச்சனையில் மனக்சப்பு என்று வைத்துக்கொள்வோம்.... முடிந்தவரை அந்த பிரச்சனையை இரண்டு பேரும் சேர்ந்து சரி செய்ய இரண்டு பேருமே முனைய வேண்டும்... அப்படி முடியவில்லை என்றால் பிரிந்து விடுவது உத்தமம்.