22 Sept 2014

செக்ஸ் உறவு கொள்ளும் நேரத்தில் நம்ம ஊர் பெண்கள் என்ன நினைக்கிறார்கள்.

Ads by H12 Media இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்தனர், அதில் "இந்தியாவில் திருமணமான பெண்களின் செக்ஸ் ஆர்வம், அவர்களது செக்ஸ் விருப்பு வெறுப்புகள், செக்சில்  அவர்களது எதிர்பார்ப்புகள்" போன்றவைகளைப் பற்றி புதிய சர்வே ஒன்றினை எடுத்துள்ளனர். இந்த சர்வே அடிப்படையில் வந்துள்ள முடிவுகள் பெண்கள் ஆர்வத்துடன் உடலுறவில் ஈடுபடுவது குறைவாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட்டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந்திரமய வாழ்க்கையால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை. அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய்விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது…”- என்கிறார். *சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினைப்பார்கள்?* - `நாளை என்ன சமையல் செய்வது?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள். - `இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள். - `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு. கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் சுவாரஸ்யமானது. 51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிவிட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கிறார்கள். தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு ….. - `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகலமாய் வாழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்று 37 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். - அவ்வப்போது ஏற்படும் உடல்வலியும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். - உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தைவிட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். - பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். - மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவருக்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தியையும், நம்பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

8 Sept 2014

ஆடு மாடு விட குறைந்த விலை போகும் பெண்கள் ராஜஸ்தான் மாநிலம் .்

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழாவிற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திருவிழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்காரவைக்கப்பட்டிருந்தனர். இவளும் அமர்ந்தாள். இவள் அருகில் ஒருவர் வந்தார். கன்னத்தைக் கிள்ளினார். தலையை வருடினார். பாப்பா உன் பெயர் என்ன என்று கேட்டார். தீபா அகர்வால் என்றாள், அந்த சிறுமி. அந்த மனிதர், அவளது பெற்றோரை நிமிர்ந்துப் பார்த்து என்ன விலை என்று கேட்டார். ‘ஏழாயிரம்தான் சாமி..!’ என்றார், அவளது தந்தை. அதிக விலை சொல்றீங்களே.. என்றார். ‘இல்லைங்க...! இதைவிட குறைக்க முடியாது!’ என்றனர், அவளது பெற்றோர்.  சரி விடுங்க! நீங்க கேட்கிற பணத்தை கொடுத்திடுறேன் என்ற அவர் பணத்தை எடுத்து, அவளது பெற்றோரிடம் நீட்ட, அவர்கள் பணத்தை வாங்கிவிட்டு சிறுமியை அவர்களிடம் தள்ளுகிறார்கள். அவள் அழுகிறாள். திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். பாப்பா பயப்படாதே. நான் உன்னை நல்லா பாத்துக்கறேன். சாக்லெட் வாங்கித் தர்றேன் வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்கிறார் அந்த மனிதர். சிறுமி மிரண்டு போய் பெருங்குரலெடுத்து அழுகிறாள். சிறிது நேரத்தில் நான்கைந்து பேர் வந்து தூக்கி  வண்டியில் போட்டு, அவளை கொண்டு சென்றுவிடுகிறார்கள்.  அவளது அழுகுரல் காற்றோடு கலந்து காணாமல் போய்விடுகிறது. இது சினிமா காட்சி அல்ல. ராஜஸ்தான் மாநிலத்து கிராமங்களில் இன்றும் நடந்துகொண்டிருக்கும் கொடூரம். பெண் குழந்தைகளை பெற்றோரே விலைக்கு விற்று விடுகிறார்கள். அதுவும் ஆடு, மாடுகளைவிட குறைவான விலைக்கு! மேவாட் என்ற நகரில் காலங்காலமாய் நடந்துவரும் வியாபாரம் இது. அதிகபட்சம் ரூ.35 ஆயிரம் வரைக்கும் இங்கே பெண்கள் விற்பனை செய்யப்படுகிறார்கள். சிறுமி,    வயதுக்கு வந்த பெண், இளம் பெண் என்று வயதிற்கேற்றபடி விலை நிர்ணயிக்கிறார்கள். இந்த விற்பனை நேரடியாகவோ, இடைத்தரகர்கள் மூலமாகவோ நடக்கிறது. வீட்டில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால்கூட சிலர் விற்றுவிடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘‘இங்கு வறுமையில் வாடுகிறார்கள். அங்கு போயாவது நன்றாக சாப்பிட்டு வசதியாக வாழட்டும்’’ என்கிறார்கள். இப்படி சந்தையில் வாங்கப்படும் சிறுமிகளை பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் வீட்டு வேலைக் காக பயன்படுத்துகிறார்கள். சம்பளம் தர தேவையில்லை. மனைவி இல்லாதவர்கள் மனைவியாக வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் மனைவிக்குரிய எந்த உரிமையும் அவர்களுக்கு கிடையாது. சமூக அந்தஸ்தும் கிடையாது.  இப்படி வாங்கி பயன்படுத்தப்படும் பெண்களை ‘பாரோ’ என்றழைக்கிறார்கள். இந்தப் பாரோக்களை ஒருவர் பணம் கொடுத்து வாங்கிவிட்டால் அவர்கள் ஜென்மம் முழுக்க அடிமைகளாகிவிடுகிறார்கள். முதலாளி என்ன வேலை சொன்னாலும் செய்யவேண்டும். சரியாக வேலை செய்யாத பாரோக்கள் சவுக்கடி வாங்குவதும் சகஜம். ஒருவர் தனது செல்வ நிலைக்கேற்ப எத்தனை பாரோக்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். கட்டிட ஒப்பந்தக்காரர்கள் பல பெண்களை விலைக்கு வாங்கி, வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். தன்னிடம் வேலை இல்லாதபோது மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்கள். இந்த பாரோக்களுக்கு குழந்தை பிறந்துவிட்டால், அதுவும் எஜமானருக்கு சொந்தமான விற்பனை பொருள்தான். தாயிடம் இருந்து பிரித்து வேறுயாருக்காவது விற்றுவிடுவார்கள். முன்பு தேவதாசிகள் என்றொரு பிரிவு இருந்தது. அந்த வாழ்க்கை அவர்களுக்கு சோகமாக இருந்தாலும், அவர்கள் ஆடை, ஆபரணங்கள் அணிந்து ஆடம்பரமாகவும் வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்க்கை அதைவிட மகாமோசம்.  பாரோக்கள் பெருமளவு சமூக விரோதிகளாலும், பணக்கார கிழவர்களாலும் வாங்கப்படுகிறார்கள். 70 வயது முதியவர்கூட 18 வயது பாரோவை வாங்கிச் சென்று திருமணம் செய்துகொள்கிறார். வீட்டு வேலைக்கும், தனது தேவைக்கும் பயன்படுத்திக்கொள்கிறார்.  சிலர் பாரோக்களை  வாங்கி, அதைவிட அதிக விலைக்கு விற்று விடுகிறார்கள். மனைவியை இழந்தவர்கள் மட்டுமல்ல, மனைவி இருப்பவர்களும் மனைவி சம்மதத்துடன் பாரோக்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பல மாநிலங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கிறார்கள்.  பாரோக்களின் மனக்குமுறல்: கொல்கத்தாவில் வசிக்கும் மெகரம் சொல்கிறார்.. “ஆடு, மாடுகளைவிட கேவலமான வாழ்க்கை எங்களுடையது. பலமுறை வீட்டை விட்டு ஓடிப்போக முயற்சித்தேன். தேடி கண்டுபிடிக்கப்பட்டு கால் எலும்பு முறியும் வரை அடித்து தீர்த்துவிட்டார்கள். அந்த அடிக்கு பயந்து மறுபடியும் ஓட முயற்சிக்கவில்லை.  குழந்தை பிறந்ததும் இருக்கும் மவுசையும் இழந்துவிடுவோம். குழந்தையையும் விற்றுவிடுவார்கள்” அசாமில் வசிக்கும் மரியம்: “என்னை மூன்று முறை விற்றுவிட்டார்கள். கடைசியாக ஒரு கண்ணில்லாத 70 வயது கிழவனுக்கு என்னை விற்றார்கள். அந்தக் கிழவர் என்னை திருமணம் செய்துகொண்டார். வீட்டு வேலைகளைப் பார்த்துவிட்டு, வெளியே வேலைக்கும் போகிறேன். கிழவரையும் கவனித்துக் கொள்கிறேன். அவருடைய மகளை பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். சில சமயம் மகள் வீட்டிற்கும் என்னை வேலைக்கு அனுப்பிவைப்பார்.  அவருடைய மகளைவிட என் வயது குறைவு. அதைப் பற்றியெல்லாம் அந்த கிழவர் கவலைப்   படுவதில்லை” ஐதராபாத்தில் வசிக்கும் கவுசியா: “35 ஆண்டுகளில் இரண்டு முறை விற்கப்பட்டேன். என் மகளை திருமணம்          செய்துகொடுத்தேன். பாரோவின் பெண் என்பதால் இரண்டாம் தார வாழ்க்கைதான் அவளுக்கு கிடைத்திருக்கிறது. பாரோவின் பெண் என்று மாமியார் அவளை கேவலமாக பேசுகிறார்.  அவளது கணவன் கையாலாகாதவன். யாரும் பெண் கொடுக்காத காரணத்தால் என் பெண்ணை கேட்டு வந்தார்கள். மனைவி என்ற அந்தஸ்து என் மகளுக்காவது கிடைக்கட்டும் என்றெண்ணி திருமணம் செய்து வைத்தேன். இந்த சமூகம் திருந்தாது. என்னை ஒரு மாமியாராகவும் மதிப்பதில்லை. சம்பந்தி என்ற அந்தஸ்தும் தரவில்லை. ‘‘உன் மகளை கண்டித்துவை. சொந்த பந்தங்கள் நடுவே உட்கார்ந்து பேசுகிறாள்” என்கிறார்கள். எங்கே என் மகளை விரட்டி விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்துகொண்டிருக்கிறது” கொல்கத்தாவில் வசிக்கும் முஸ்கான்: “நான் கொல்கத்தாவிலிருந்து பீகாருக்கு விற்கப்பட்டேன். எனக்கு மீன் மிகவும் பிடிக்கும். ஆனால் நான் வந்து சேர்ந்த இடத்தில் சுத்த சைவம். மீனை கண்ணால்கூட பார்க்க மாட்டார்கள். மீன் சாப்பிட நாக்கு தவியாய் தவிக்கும். ஆனால் அனுமதி கிடையாது. ஒருமுறை அவர்களுக்குத் தெரியாமல் மீன் சாப்பிட்டுவிட்டேன் என்பதற்காக ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறி என்னை உயிரோடு எரித்துவிட முயற்சி செய்தார்கள். நான் இருமுறை விற்கப்பட்டவள். மூன்றாவது முறையும் விற்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வயதாகிவிட்டால் வீட்டை விட்டே துரத்தி விடுவார்கள். எங்காவது போய் பிச்சை எடுத்துதான் பிழைக்கவேண்டும்” பீகாரில் வசிக்கும் ரேஷ்மா: “நான் வித்தை காட்டும் ஒரு குடும்பத்தினரால் திருமணம் என்ற பெயரில் வாங்கப்பட்டேன். அவர்களுக்காக நிறைய சம்பாதித்துக் கொடுத்திருக்கிறேன். என் கணவரோடு பிறந்தவர்கள் ஏழு ஆண்கள். சொன்னால் வெட்கக்கேடு. எனக்கு பிறந்த குழந்தைகளில் எது என் கணவருடையது என்று எனக்குத் தெரியாது” என்று விரக்தியுடன் கூறுகிறார். பெண்களை விற்பனை பொருளாக்கும் நிலை எப்போது மாறும்?

3 Sept 2014

மாதோருபாகன்

பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.

இதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.

தமிழர்களின் நுட்பமான கலாசார பின்புலங்களுக்கும் நாகரிகங்களுக்கும் எத்தனையோ விஷயங்கள் மிகையுணர்ச்சியோடும் பெருமையோடும் மேடைகளில் உதாரணம் காட்டப்படுகின்றன. ஆனால் பாலியல் விஷயங்கள் என்றால் மாத்திரம் ஒரு அசூயையோடு அதைக் கடந்து ஆனால் ரகசியக் கண்களால் உற்று  நோக்கிக் கொண்டேயிருக்கும் ஒரு போலித்தனம் இச்சமூகத்தில் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. பாலியல் சமாச்சாரங்களை மேற்குலகு விஞ்ஞான ரீதியாக அணுகுவதற்கு முன்பாகவே அதை ஆன்மீகத்துடன் இணைத்து இலைமறை காயாக புரிந்து கொள்ளும் வண்ணம் பல புடைப்புச் சிற்பங்களும் பாடல்களும் உருவாக்கப்பட்டிருந்தன.அதன் நுட்பத்தை பொறுமையாக திறந்து பார்க்கும் ஞானம்தான் நமக்கு வாய்க்கவிலலை. குழந்தைப் பேறின்மைக்கு நூலாசிரியர் விவரிக்கும் சமூகத்திலேயே ஒரு நுட்பமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைக் குற்றவுணர்ச்சியில்லாமல் கையாள்வதற்கு ஏதுவாக ஆன்மீகத்துடன் பிணைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற போலியான ஒழுக்க மதிப்பீடுகள், மனித குலம் ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்கள் இயற்கைக்கு எதிரானவை. நிலவுடமைச் சமுதாயச் சிந்தனையின் தொடர்ச்சியாக திருமணம், குடும்பம், வாரிசு போன்ற நிறுவனங்களை தோற்றுவித்த மனித குலம் தான் விரித்து வைத்திருக்கும் வலையில் தானே மாட்டித் தவிப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.
ஒருபக்கம் பெண்களை தெய்வமாகப் போற்றி பாவனை செய்து இன்னொரு பக்கம் இரண்டு வயது பெண் குழந்தைகளிடம் கூட பாலியல் வன்முறையை நிகழ்த்தும் பாலியல் வறட்சி கொண்ட ஒரு சமூகத்தில் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது இதுதான். "ஓர் ஆணும் பெண்ணும் மனதார இசைந்து விரும்பி பழக விரும்பினால் அந்த அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அதற்கு எந்தவொரு கற்பிதமும் நிறுவனமும் அமைப்பும் தடையாக இருக்கக்கூடாது,போலியான ஒழுக்க மதீப்பீடுகளைக் கொண்டு அந்த உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது" என்பது. நம் ஆதி காலத்து தாய்வழிசமூகம் இவ்வாறுதான் இருந்தது. பாலியல் வறட்சிகளோ உளச்சிக்கல்களோ வன்முறைகளோ இல்லாமல் அது நிம்மதியாகவே இயங்கியிருக்கக்கூடும். ஆணாதிக்க சுயநலங்கள் உள்நுழைந்தவுடன்தான் பல குழப்பங்கள் ஏற்பட்டன. 'நாகரிக உலகத்திலிருந்து கற்காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டுமா என்று நீதி சார்ந்த கூச்சல்கள் ஒலிக்கக்கூடும் என்றாலும்  கலாசாரம் என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபடும் நிலையில்லாதது என்கிற மேல்நோக்குப் பார்வையில் நோக்கினால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் புதினத்தின் உச்சத்தை நோக்கி பெருமாள் முருகன் தனது வாசகர்களை மிக நிதானமாக தயார்ப்படுத்தி அழைத்துச் செல்கிறார். விடுதலைக்கு முன்பான காலனியாதிக்க காலத்தில் இயங்கும் இந்தப் புதினத்தில் கொங்கு சமுதாயத்தின் பல்வேறு தொன்மங்களை கடந்து செல்ல வேண்டும். என்னதான் பெருமாள் முருகன் கடிவாளத்தை இறுகப் பற்றி சாவகாசப்படுத்தியிருந்தாலும், குழந்தைப் பேறிற்கான பதினான்காம் திருவிழா பற்றிய விவரணையைத் தொட்டதுமே ஒரு திரில்லர் நாவலின் சாகசத்திற்கு இணையாக பரபரக்கிறது. ஒரு கச்சிதமான தருணத்தி்ல் புதினம் நிறைவு பெறுகிறது. தாகூரின் 'சிதைந்த கூடு' என்கிற நெடுங்கதையையொட்டி சத்யஜித்ராய் உருவாக்கிய சாருலதா திரைப்படம், பரஸ்பரம் நம்பிக்கையை இழந்ததொரு தருணத்தில் நிறைவுபெறும்.அதன் தொடர்ச்சியை நாம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். அவ்வாறான வாசக பங்கேற்பையே இந்தப் புதினமும் கோருகிறது.
குழந்தைப் பேறின்மைக்கு டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகைத் தாய் என்று பல தீர்வுகளை சமகால விஞ்ஞானம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போதிலும் அது குறித்தே நாம் பல மனத்தடைகளையும் சந்தேகங்களையும் கொண்டிருக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய ஒரு தொன்ம சமூகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடைமுறை சார்ந்த யதார்த்தமான தீர்வின் முற்போக்குத்தனம் வியக்க வைக்கிறது. 

சமீபத்தில் வந்த மிக முக்கியமானதொரு, அதிகம் உரையாடப்பட வேண்டிய புதினமிது. திருச்செங்கோடு குறித்தான களஆய்வில் கிடைத்த பல அனுபவங்களில் ஓர் உந்துதல்தான் இந்த நாவல் என்கிறார் பெருமாள் முருகன்.ஆய்வின் போது கிடைத்த தரவுகளை வரலாறு சாாந்து விரிவாக எழுதும் எண்ணமிருப்பதாக முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அது சாத்தியப்பட்டால் அது தமிழின் முக்கியமானதொரு கலாசார ஆவணப் பதிவாக இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்தப் புதினம் ஏற்படுத்துகிறது.