சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம்
சர்க்கரை வியாதி நோய் எய்ட்ஸைக்காட்டிலும் கொடுமையானது என்று பலநிபுணர்கள் கூறுகின்றனர். அது ஒருநோயல்ல. நோய்களின் ஊற்று.உலகமெங்கும் பரவி வரும் நோயாகசர்க்கரை வியாதி (நீரிழிவு) உருவெடுத்துவருகிறது. 2015 க்குள், புற்றுநோய், இதயநோய்களை விட, மனிதர்களின் இறப்புக்குநீரிழிவு நோய்தான் முதல் காரணமாகப்போகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு,நோயில்லாதவர்களை விட இருமடங்குஅதிகம். இந்தியா போன்ற வளரும்நாடுகளில், வருங்காலங்களில் சர்க்கரைவியாதி நோய் 170 சதவிகிதம் அதிகரிக்கும்.நோயில்லாதவர்களை விட, நீரிழிவு நோய்உள்ளவர்களின் ஆயுட்காலம் 4லிருந்து8வருடங்கள் குறைந்து விடும். இவை வெறும்பயமுறுத்தல்கள் அல்ல. நிதரிசனமானஉண்மை. எனவே இதை சமாளிக்க,விழிப்புணர்வு அவசிய தேவை. வருமுன்காக்கும் வழிகளும், வந்த பின் காக்கும்முறைகளும் மக்களுக்கு போதிக்கப் படவேண்டும்.
நீரிழிவு என்றால் என்ன?
வண்டிகளுக்கு பெட்ரோல்தேவை. அதே போல் உடலுக்கு எரிசக்திதேவை. இந்த எரிசக்தி - க்ளூக்கோஸ். நாம்உண்ணும் கார்போ-ஹைடிரேட் உணவுகள்க்ளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.இவைகளை ரத்தத்தின் வழியாக உடல்செல்களுக்கு கொண்டு போக வேண்டும்.ஆனால் செல்கள் ரத்தத்திலிருந்துக்ளுகோஸை நேரடியாக எடுத்துகொள்ளாது. செல்லின் பாதுகாப்பு 'பூட்டை'திறக்க சாவியாக கணையம் சுரக்கும்இன்சுலீன் ஹார்மோன் தேவை. இந்தஇன்சுலீன் உற்பத்தி குறைந்தால் அல்லதுசெல்கள் இன்சுலீனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் க்ளுகோஸ்ரத்தத்திலேயே தேங்கி விடுகிறது. ஒரு பக்கம்எரிபொருள் குளுக்கோஸ் கிடைக்காததால்உடல் நலிந்து போகும். இன்னொரு பக்கம்ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிபலப்பிரச்சனைகளை உண்டாக்கும். இதுதான் சர்க்கரை வியாதி.
சர்க்கரை வியாதியின் காரணங்கள்
இது தான் நீரிழிவுக்கு காரணம்என்று அறுதியிட்டு சொல்லமுடியாததால்தான் சர்க்கரை வியாதி நோயை பூரணமாககுணப்படுத்த முடியவில்லை. பாரம்பரீயம்,சுற்றுப்புற மாசுபடிந்த சூழ்நிலை,போஷாக்கில்லாமல் போனால்,உழைப்பில்லா வாழ்வு, தவறான உணவுமுறை, அதிக உடல் பருமன், சில மருந்துகள்போன்ற பல காரணங்களை கூறலாம்.
சர்க்கரை வியாதியின் வகைகள்
பல விதமாக பிரிக்கப்பட்டாலும், நீரிழிவுநோயின் இரண்டு முக்கிய பிரிவுகள்
• டைப் - 1 சர்க்கரை வியாதி (நீரிழிவு) -இது தான் தீவிரமான நீரிழிவு வியாதி மொத்தநோயாளிகளில் 10% டைப் 1 நீரிழிவால்பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரிவினர் தினசரிஇன்சுலீனை ஊசிமூலம் உடலில் செலுத்திக்கொள்ளப்படும்.
• டைப் - 2 சர்க்கரை வியாதி (நீரிழிவு) -இன்சுலீன் ஊசி தேவைப்படாமல்மருந்துகளால் கட்டுப்படுத்திக் கொள்ளும்நிலை.
இதைத் தவிர கர்ப்பகால நீரிழிவுஎன்ற பிரிவும் உண்டு. இது கர்ப்பிணிபெண்களுக்கு ஏற்படும். குழந்தைபிறந்தவுடன் மறைந்து விடும்.
சர்க்கரை வியாதி பரிசோதனைகள்
இரவு பட்டினிக்கு பிறகுகாலையில் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த ரத்த சர்க்கரைஅளவு 125 மி.கி. அளவை தாண்டக்கூடாது.இரண்டு தடவை இந்த பரிசோதனையைசெய்து கொள்ள வேண்டும்.
பிறகு 75 கிராம் குளுக்கோஸைஉட்கொண்டு, ரத்தத்தை பரிசோதிக்கவேண்டும். இந்த நிலையில், சர்க்கரை அளவு200 மி.கி. அளவுக்குள் இருக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி அறிகுறிகள்
• அபரிதமாக சிறுநீர் போதல்
• அடங்காத தாகம்
• தீராத பசி
• தீடிரென்று எடை குறைதல்
• பலவீனம், சோர்வு
வாழ்க்கை முறை மாற்றம்
முதல் கட்ட சிகிச்சை -வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.உணவு கட்டுப்பாடுகள், சத்துள்ள ஆகாரம்ஆகியவையாகும். உடல் பருமன்உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி அவசியம். யோகா, ஆசனங்கள்இவற்றை செய்ய வேண்டும். 'ஸ்ட்ரெஸ்ஸை' (Stress) தவிர்க்க வேண்டும். தினசரி 30நிமிடம் நடந்தாலே போதும். புகைப்பது, மதுபானம் இவற்றை கைவிடவும்.
உணவு முறை
காய்கறி நிறைந்த உணவு, பாதாம்போன்ற பருப்புகள், பீன்ஸ், நடுத்தர அளவில்பழங்கள், தானியங்கள் இவை நீரிழிவுநோயாளிகளுக்கு ஏற்ற உணவு.நோயாளிகளுக்கு தகுந்த உணவை டாக்டரேசொல்லுவார். முக்கியமானது - இனிப்புகள்கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுபயனளிக்கும்.
மேற்கண்டவை தவிர நீரிழிவுநோயாளிகள் அடிக்கடி இரத்த சர்க்கரைஅளவை சோதனை செய்து கொள்ளவேண்டும்.
ஆயுர்வேதமும் சர்க்கரை வியாதியும்
நீரிழிவு நோய் கி.மு. 1500 வருடங்களுக்குமுன்பே, ஆயுர்வேதம் அறிந்த நோய்.பிரேமஹா என்ற பெயரில் 20 வகைகள்சரகசம்ஹிதையில்விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதில்'மதுமேகம்' என்பது நீரிழிவு நோயைகுறிக்கும். நீரிழிவின் காரணங்கள்,அறிகுறிகள், தவிர நீரிழிவு வியாதியல்ல,வளர்சிதை மாற்றக் கோளாறு (Metabolic Disorder) என்றவை 3500 வருடங்களுக்குமுன்பே நமது ஆயுர்வேத மருத்துவர்களுக்குதெரிந்திருந்தது. இந்த உண்மை அலோபதிவைத்தியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. சரக சம்ஹிதையில் மதுமேகத்தின் காரணங்கள், அறிகுறிகள்,சிகிச்சைமுறை விவரமாககொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தவிவரங்கள், தற்போது தெரிந்திருக்கும்விவரங்களுக்கு ஈடானது. எனவே நம்ஆயுர்வேத நிபுணர்களை பற்றி நாம் பெருமைஅடையலாம்.
ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு- பாதுகாப்பான மூலிகை மருந்துகளைகொடுப்பது மட்டுமில்லாமல் சரியானஉணவுகளையும் பரிந்துரைப்பது. ஏன்,சுஸ்ருதர் நீரிழிவு நோயாளிகள் கிணறுவெட்டுவது போன்ற உடல் உழைப்பைமேற்கொள்ள வேண்டும். தினமும் 4 மைல்நடக்க வேண்டும் என்றிருக்கிறார்! உடல்எடையை குறைக்க வேண்டும் என்பதையும்ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும்சிறந்த மூலிகைகள் பல கொடுக்கப்படுகிறது.பயனுள்ள மூலிகள் - இவை பக்க விளைவுகள்உண்டாக்காத மூலிகைகள். இந்த மூலிகைமருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது,உங்களின் வழக்கமான அலோபதிமருந்துகளை நிறுத்தக் கூடாது. முக்கியமாகஇன்சுலீன் உபயோகிப்பவர்கள், இன்சுலீனைநிறுத்தவே கூடாது.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் ஆயுர்வேத மூலிகை மருந்துகளையும் சேர்த்துஎடுத்துக்கொள்ள வேண்டும், ஓரிருமாதங்களுக்குப் பின்னர் சர்க்கரை அளவைப்பரிசோதித்து, சர்க்கரை அளவுகுறைந்திருந்தால் மட்டுமே மருத்துவரின்ஆலோசனையுடன், ஆங்கில மருந்தின்அளவைக் குறைத்து எடுத்துக் கொள்ளலாம்.சர்க்கரை அளவு குறையவில்லையெனில்,வருடத்திற்கு ஒரு முறை 2 அல்லது 3மாதங்கள் ஆயுர்வேத மூலிகை மருந்துகளைஎடுத்துக் கொண்டால் கணையம்வலுப்பெறும், சர்க்கரை வியாதியால் அல்லதுஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகள் நீங்கும் அல்லது தாக்கம்குறையும்.
குறிப்பாக சர்க்கரை வியாதி பாதித்து 5வருடங்களுக்கு மேல் ஆனாவர்கள்ஆயுர்வேத மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான்சர்க்கரை வியாதியால் வரும் சிக்கல்கள்குறையும்.
ஆயுர்வேத மூலிகை மருத்துவம்
ஆயுர்வேத மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் நேரில் வரமுடிந்தவர்கள் நேரில் வரலாம், அல்லதுபணம் அனுப்பி குரியரில் மருந்துகள்பெறலாம்.
குரியரில் மருந்துகள் பெறதொடர்பு கொள்ள பார்க்க