21 Dec 2015

உங்க மனைவியை எப்போதும் ஹாப்பி யா வச்சிருக்க சில வழிகள்

உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை போல இல்லாது, ஆறறிவு கொண்ட மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டும்

எப்போதும் கொடுத்து பழக வேண்டும், வாங்கி பழக கூடாது. எனவே, உங்கள மனைவி ஆரம்பிப்பதற்கு முன்பே, நீங்கள் அவரை புகழுதல், பாராட்டுதல், காதல் வார்த்தைகள் பேசுதல், கொஞ்சுதல் என தொடங்கிவிட வேண்டும். தினம் தினம் இல்லையெனிலும் கூட, குறைந்தது வார இறுதியிலாவது அவரிடம் அன்பாக, பாசமாக அவருக்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

அவரவருக்கு அவரவர் தங்கள் மனைவியே ரம்பை, ஊர்வசி, மேனகை. இதை மனதில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது அவர்களது காதில் விழும்படி உரைக்கவும் வேண்டும். யார் கூறாவிட்டாலும், தனது கணவன் தன்னை அழகு என கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா பெண்களிடமும் இருக்கும்.

 

வீட்டில் என்ன தான் மனைவி நன்றாக சமைத்தாலும், நொட்டைப் பேச்சு பேசுவது என்பது தான் ஆண்களுக்கு தெரிந்த ஒரே விஷயம். இது தாத்தாவில் இருந்து பேரன் வரை அனைவரும் கடைபிடிக்கும் செயல். இதை விடுத்து, அவர்களது சமையல் நன்றாக இருக்கிறது என்று அவர் பரிமாறும் போது ஒரு வார்த்தை புன்னைகையோடு கூறி பாருங்கள். நாளையில் இருந்து சமையலோடு சேர்ந்து காதலும் கமகமக்கு

 

 

நீ எனக்கு மனைவியாய் அமைந்ததை நினைத்து பெருமை அடைகிறேன். நீ எனக்கு கிடைத்த பெரும் வாழ்நாள் பரிசு என்று கூறிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். நாளை முதல் இல்லற வாழ்க்கையில் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரியும், சண்டைகள் குறையும்.

No comments:

Post a Comment