29 Jan 2016

காதில் நுழைந்த பூச்சியை வெளியில் எடுப்பது எப்படி?

posted by sudar24 December 8, 2015 ஆரோக்கியம்

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணெயோ, உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்து விடும் அல்லது பூச்சி மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது.

இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப்பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. ஜாக்கிரதையாகக் கையாளாவிட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்.


பெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்

posted by sudar24 December 9, 2015 ஆரோக்கியம்

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மார்பகங்கள். இந்த பிரச்சினையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள். மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளைத் தான் அணிய முடியும்.

ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும். ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

தொங்கும் மார்பகங்களை ஒரு சில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். தரையில் படுத்துக் கொண்டு இரு முனை பளுக்கருவியை(Dumbbell) கொண்டு மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும். பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இது போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். இதுபோன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும். ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செயது வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

posted by sudar24 December 16, 2015 ஆரோக்கியம்

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்சனை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும்.

ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம். இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள். தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.

* சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம். முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.

* கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம். சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.

* அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும். சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.

* சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.

– இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.


கர்ப்ப காலத்தில் இரத்தத்தில் சர்க்கரை, உப்பின் அளவு திடீரென கூடுவது ஏன்?

posted by sudar24 December 22, 2015 ஆரோக்கியம்

“சிலருக்கு ஒபிசிட்டி காரணமாக இப்படி நிகழலாம், சிலருக்கு மரபியல் காரணங்களால் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு கூடலாம்

அல்லது குறையலாம். அப்பாவுக்கோ, தாத்தாவுக்கோ சர்க்கரைச் சத்தோ, உப்புச்சத்தோ இருந்து அது அம்மாவின் வழியாக கருவில் இருக்கும் குழந்தைக்கும் பரவ வாய்ப்பு உண்டு.

கருவில் இருக்கும் குழந்தைக்குப் பரவும்போதுதான் குறைப்பிரசவம், அல்லது கருப்பையில் குழந்தை இறந்து போதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கருவில் இருக்கும் குழந்தைக்கு அம்மாவின் மூலமாக இரத்தத்தில் இருக்கும் உப்பின் அளவு அதிகரிக்கும்போது குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி நிகழ்வதை மருத்துவ மொழியில் இன்ட்ராயூட்டரின் குரோத்ரிடார்டேஷன் என்பார்கள்.

மேலும் துரதிருஷ்டவசமாக கருவிலேயே உப்பின் அளவு அதிகரிப்பதால் குழந்தை இறந்தே பிறக்கும் நிலையை இன்ட்ராயூட்டரின் டெத் என்பார்கள். அதனால் கர்ப்ப காலங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து செக் அப் செல்ல தயங்கக்கூடாது.

வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக அம்மா எப்போதும் தான் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மீதான விழிப்புணர்வைத் தவிர்க்காமல் இருப்பது குழந்தைக்கும் அம்மாவுக்கும் நல்லது.


உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

Home  »  ஆரோக்கியம்   »   உங்களுக்கு அல்சர் தீவிரமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!!

posted by sudar24 October 17, 2015 ஆரோக்கியம்

வயிறு மற்றும் சிறு குடல் சுவர்களில் ஏற்படும் புண்கள் தான் அல்சர். அல்சரானது சரியாக சாப்பிடாமல், வயிற்றில் உணவைச் செரிக்க சுரக்கப்படும் அமிலமானது வயிற்றை அரிப்பதால் புண்கள் ஏற்படும். அல்சரை ஆரம்பத்திலேயே சரிசெய்து விட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதையே கவனிக்காமல் விட்டுவிட்டால், அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அளவில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சிலருக்கு அல்சரானது அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் அருந்துவது, பைலோரி தொற்றுகள், புகைப்பிடித்தல், ஒருசில மருந்துகளினால் ஏற்படும். அல்சர் ஒருவருக்கு இருந்தால், அவர் மிகுந்த வலியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே அல்சர் இருந்தால் என்ன அறிகுறிகள் தென்படும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதிலும் இன்றைய காலத்தில் பலர் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், அல்சரால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும். சரி, இப்போது அல்சர் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.

அடிவயிற்று வலி
அல்சர் இருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலியை சந்திக்க வேண்டியிருக்கும். இதற்கு காரணம் வயிற்றில் அதிகப்படியான அமிலம் இருப்பது தான். இந்த அமிலம் தான் புண்ணை ஏற்படுத்தி, வலி மற்றும் அசௌகரியத்தை உருவாக்குகிறது.

குமட்டல்
வயிற்றில் உணவை செரிக்கும் அமிலத்தின் ஏற்றத்தாழ்வுகள் அடிக்கடி குமட்டலை உருவாக்கும். எனவே உங்களுக்கு அல்சர் உள்ளது என்பதை குமட்டலின் மூலமும் அறியலாம்.

திடீர் எடை குறைவு
உங்களின் எடை திடீரென்று குறைந்தால், அதற்கு முக்கியமான காரணங்களில் அல்சரும் ஒன்று. எனவே மருத்துவரை பரிசோதித்து முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

இரத்த வாந்தி
சில நேரங்களில் இரத்த வாந்தி கூட எடுக்க நேரிடும். குறிப்பாக உங்கள் வயிற்றில் புண் அதிகம் இருந்தால், இரத்தக் கசிவு ஏற்பட்டு, அதனால் இரத்த வாந்தி எடுக்கக்கூடும்.

ஏப்பம்
உங்களுக்கு ஏப்பம் ஒருவித புளிப்புத்தன்மையுடன் வந்தால், அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அல்சர். எனவே மேற்கூறிய அறிகுறிகளுடன் ஏப்பமும் வந்தால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

வயிற்று உப்புசம்
சரியாக சாப்பிடாமலேயே, வயிறு நிறைந்துவிட்டது போல் உப்புசத்துடன் இருந்தால், அதுவும் அல்சருக்கான அறிகுறிகளுள் ஒன்று. எனவே வயிறு உப்புசமாக இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், உங்கள் மருத்துவரிடம் சொல்லி உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

கருப்பு நிற மலம்
உங்கள் மலம் கருப்பு நிறத்தில் வெளிவந்தால், உங்களுக்கு அல்சர் முற்றிவிட்டது என்று அர்த்தம். எனவே இந்நிலையில் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.


ஆண்மை குறைபாட்டை போக்கும் எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

posted by sudar24 January 5, 2016 ஆரோக்கியம்

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும்.

பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவையே ஆண்மை குறைபாட்டிற்கு காரணமாகும்.

* நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.

* அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.

* நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.

* ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.

* தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.

* சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.

* துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.

* முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

* வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.

* நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

சித்த மருந்து எடுத்து கொள்ளும் போது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியவை :

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.


வயிற்று நோய்களை தீர்க்கும் தும்மட்டிக்காய்

posted by sudar24 January 13, 2016 ஆரோக்கியம்

மூலிகையின் பெயர் :- தும்மட்டிக்காய்.

2. தாவரப்பெயர் :- Citrullus colocynthis.

பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மருத்துவப்பயன்கள் :- தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.

தும்மட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின் சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில் காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும் போது இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம் லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம், மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு 10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப் பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக வெல்லத்தில் பொதித்து10 நாள்கள் காலை யில் மட்டும் கொடுத்து வர வயிற்று நோய்கள் குன்மம், வாயு தீரும்.

நிலவேம்பு கஷாயம் சில உண்மைகள்

posted by sudar24 January 13, 2016 ஆரோக்கியம்

பல்வேறு வைரஸ் கிருமிகளால் வரும் பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் நிலவேம்பு கஷாயம் ஒரு நிச்சய தீர்வாக இருக்கும் என சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா?, இது எத்தனை தூரம் உதவியாக இருக்கும்?. இதை பாராசிடமால் போல் சுரம் வந்த பின் பயன்படுத்த வேண்டுமா?, சுரம் வராமல் தடுக்க உதவுமா?. இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்தலாமா?. எத்தனை நாள் குடிக்க வேண்டும்?. ஒரு முறை குடித்த பின் எத்தனை மாத இடைவெளியில் தற்காப்புக்காக குடிக்க வேண்டும்? என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்த நிலவேம்பு குடிநீரில் அப்படி என்னதான் இருக்கிறது?.

முதலில் கஷாயம்–குடிநீர் என்றால் என்ன என்று பார்போம்.

இன்றைக்கு ‘ஹெர்பல்’ டீ என்று சொல்கிறார்களே அதை போன்றதே கஷாயம்–குடிநீர்.

அதாவது சில மூலிகைகளை உலர வைத்து கரகர பொடியாக்கி அதனை கொதிக்கின்ற நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது.

மருந்தாக பயன்படுத்தும் பொழுது அந்த மூலிகையில் இருக்கும் மருந்து சத்து நீரில் வரும் வகையில் பொடித்து, ஊறவைத்து, கொதிக்கவைத்து, அதே நேரத்தில் அதில் இருக்கும் ஆவியாக கூடிய நறுமண பொருள் தப்பி செல்லாமல் மூடிவைத்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுதல்.

நிலவேம்பு கஷாயத்தில் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய்புடல், கோரை கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகம் என்று 9 மூலிகைகள் உண்டு.

ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல் செயல் உண்டு. அவற்றின் கூட்டு செயல் சிறப்பானது.

அதாவது தனிப்பட்ட மூலிகைகளின் பயன்பாட்டில் இருக்கும் தன்மையை காட்டிலும், சில மூலிகைகளை சேர்த்து செய்யும் பொழுது மருந்தின் செயல் தன்மை கூடுவதுடன், சில மூலிகைகளில் உள்ள விரும்பத்தகாத பண்பும் சமன் செய்யப்படும், மருந்தின் குறைந்த அளவில் கூட நோய் நீக்கும் தன்மை சிறப்பாக இருக்கும்.

சுரம் என்பது பொதுவாக வாதம், பித்தம், கபம் என்று சொல்லும் மூன்றில் பித்தம் – வெப்பம் மிகுதியினால் வரும். எனவே அதனை சமன்படுத்தும் மருந்து குளிர்ச்சியை தருவதாகவும் புளிப்பு, உப்பு, காரம் நீக்கிய கசப்பு, இனிப்பு சுவை மிகுந்ததாக இருத்தல் வேண்டும்.

அதே நேரத்தில் வாத மிகுதியால் ஏற்படும் வலியை குறைப்பதாகவும் இருத்தல் வேண்டும்.

வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், மிளகு, பற்பாடகம் முதலியவை வெப்பத்தை குறைக்கும் பித்த சமனிகள். கோரைக்கிழங்கு, சுக்கு இரண்டும் வாதத்தின் வெளிப்பாடான வீக்கம் வலியை போக்கும். நிலவேம்பு, பேய்புடல் ஆகியவை பித்தம் மற்றும் கபத்தை சீராக்கும்.

இவ்வாறு வாதம், பித்தம், கபம் மூன்றையும் சீர்படுத்தும் தன்மையால் நிலவேம்பு கஷாயம் சிறப்பு வாய்ந்தது.

ஒவ்வொரு மூலிகைக்கும் சிறப்பான மருந்தியல் செயல் உண்டு.

அதனை பற்றி தெரிந்துகொள்வோம்.

நிலவேம்பு 2 அடி வரை வளரும் செடி வகையை சார்ந்தது, இதன் இலை மிளகாய் செடியின் இலையை போன்ற வடிவத்தில் இருக்கும். பாம்பின் நாக்கை போன்ற வடிவில் மலரின் இதழ் இருக்கும்.

கசப்புகளின் அரசன் என்று வர்ணிக்கப்படும் இந்த செடியின் தண்டு நான்கு பக்கங்களை உடையதாக இருப்பதால் எளிதில் இனம் காண முடியும்.

வேம்பு என்ற சொல் கசப்பு என்பதை குறிக்கும். எனவே இதனை வேப்ப மரத்துடன் தொடர்புபடுத்தி மரம் என குழம்பக்கூடாது.

அண்மைக்கால ஆய்வுகள் நிலவேம்பு பல்வேறு வைரஸ் கிருமிகளை கொல்லும் என்றும், ஈரல் பாதிப்பை தடுக்கும் தன்மையும், குருதி சர்க்கரை இரத்த அழுத்தம் இரண்டையும் குறைக்கும், பசியின்மையை போக்கும் மருந்தியல் செய்கை உடையது என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுரத்தை கட்டுப்படுத்தும் செய்கையும் முதன்மையானது.

வெட்டிவேர், விலாமிச்சை வேர் இரண்டும் பொதுவாக மணற்பாங்கான இடங்களில் மண் அரிப்பை கட்டுப்படுத்த உதவும், 2 அடி வரை வளரும் தன்மையும் ஆண்டு முழுமையும் வளரும் புல் வகை தாவரங்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தருவதற்காக தட்டி, பாய், விசிறி செய்து பயன்படுத்துவதுடன் வெயில் காலத்தில் மண் பானையில் நீரில் வெட்டிவேரை போட்டு வைக்கும் பொழுது அதில் உள்ள நறுமண எண்ணெயின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும் தன்மையாலும் பயன்படுத்துவது நமக்கு தெரியும்.

இந்த காரணத்தினாலே சுரம் போக்கும் பித்தத்தை சீர் செய்யும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

விலாமிச்சை வேர் என்பது மலையாளத்தில் வெட்டிவேரின் பெயர் என்பதால் ஒரே மூலிகையை இரண்டு முறை சேர்க்கிறார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.

சந்தனமும் குறிப்பாக அதன் வைரம் பாய்ந்த கட்டை மற்றும் வேர் பகுதிகளில் உள்ள நறுமண எண்ணெயின் கிருமி நாசினி தன்மையாலும் குளிர்ச்சி தரும் தன்மையாலும் சுரம் நீக்கும் தன்மை மற்றும் நிலவேம்பு, பேய்புடல் ஆகிய மூலிகைகளின் மிகுந்த கசப்பு தன்மை மருந்து பருகுவதை வெறுக்கும் நிலையை போக்கும்.

பேய்புடல் வேலி ஓரங்களில் வளரக்கூடிய ஏறு கொடி வகையை சார்ந்தது. குஜராத் போன்ற மாநிலங்களில் இதன் காய் ‘படோலம்’ என்ற பெயரில் சமைத்து சாப்பிடப்படும்.

இந்த இலை பித்தத்தை சீராக்கும்.

வீக்கத்தையும் உடல் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியையும் போக்கும். ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்கும். சில மருந்து செய்கின்ற நிறுவனங்கள், விலை குறைவு என்ற காரணத்தினால் இதற்கு பதில் பாகற்காய் கொடியை பயன்படுத்துகிறார்கள்.

சுக்கு ஒவ்வொருவருக்கும் தெரிந்த வீட்டு மருந்து என்றே சொல்லலாம். சுக்கு இல்லாத கஷாயம் இல்லை என்ற பழமொழியும் சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற சொல்லாடலும் நமக்கு தெரியும்.

வாதத்தை சமன்படுத்தும்.

வீக்கம் வலியை நீக்கி செரிமானத்தை சீர்படுத்தி, சுரத்தில் வரும் உடல் வலி, தலை வலி ஆகியவற்றை போக்கும்.

மிளகும் நமக்கு நன்றாக தெரியும். சித்த மருத்துவத்தில் பித்த சமனிப்பொருள் என்று விவரிக்கப்படும் நம் தினசரி உணவில் பயன்படுத்தப்படும் பொருள். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவு அருந்தலாம் என்று போற்றப்படுகிறது.

இன்றைய ஆய்வில் இதில் உள்ள ஜீவீஜீமீக்ஷீவீஸீமீ என்ற வேதிப்பொருள் கிருமியை கொல்லும் செயலுடன், பிற மருந்துகளை உட்கிரகித்து குறைந்த அளவிலேயே மருந்துகள் நன்றாக செயல்பட செய்யும் தன்மை உடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பற்பாடகம் தரையில் படரும் சிறு செடி நூல் போன்ற மெல்லிய தண்டு உடையது. கிருமி நாசினி செய்கையும், சுரம் அகற்றி செய்கையும் உடையது. ஈரலை பாதிக்கும் பல்வேறு நச்சு பொருட்களில் இருந்து பாதுகாக்கும்.

கோரை கிழங்கு விவசாயிகளால் பெரிதும் வெறுக்கப்படுகின்ற புல்லானாலும் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்ற கிழங்கை உடையது. வீக்கம், வலியை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடையது.

எப்படி பயன்படுத்துவது?

வைரஸ் நோயினால் சுரம் தொற்று நோயாக பரவும் காலத்தில் நோய் தடுப்பிற்காக நிலவேம்பு கஷாயத்தை தினசரி இரண்டு வேளை உணவுக்குப்பின் குறைந்தது 5 நாட்களுக்காவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

சுரம் வந்த பின் பயன்படுத்துவதாக இருந்தால் புளூ சுரமாக இருந்தால் ஒரு நாளுக்கு 3 வேளை பயன்படுத்த வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே நல்லது.

பொதுவாக சிறந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் நிலவேம்பு கஷாய சூரணம், ஒன்றிரண்டாக இடிக்கப்பட்டு பொடியாக எளிதில் நீரில் கொதிக்க வைக்கும் பொழுது கஷாயமாக மாறும் தன்மையில் இருக்கும்.

2 கிராம் பொடிக்கு 100 மில்லிலிட்டர் நீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி பருக வேண்டும்.

ஒரு முறை கொதிக்க வைத்ததை மீண்டும் கொதிக்க வைக்க கூடாது.

தயாரித்த மூன்று மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். மூடி வைக்காமல் கொதிக்க வைத்தாலும், அதிகம் கொதிக்க வைத்தாலும் மருந்தில் உள்ள நறுமண வேதியியல் பொருட்கள் மருந்தில் தங்காமல் ஆவியாக வெளியேறும், மருந்தின் செயல்தன்மை குறையும்.

எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா?

நிலவேம்பு கஷாயம் எல்லா வகை காய்ச்சலுக்கும் ஒரே தீர்வா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

குடற்சுரம் என்னும் டைபாய்டு காய்ச்சலில் சித்த மருத்துவத்தில் பிற மருந்துகள் உண்டு.

நிலவேம்பு கஷாயம் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது குடல் புண்ணை அதிகப்படுத்தும். வயிற்றில் எரிச்சலை உண்டாக்கலாம்.

மழைகாலங்களில் வைரஸ் கிருமிகளால் வரும் புளூ, பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் முதலிய சுரத்தினால் பலரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு முறை (8 ஆண்டுகளுக்கு முன்பு ) நானும் வைத்யா உஸ்மான் அலியும் குஜராத்தில் பவநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய மருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குனருடன் பேசிக்கொண்டு இருந்தோம். ‘‘எங்கள் மருந்து நிறுவனத்தில் பல ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்துள்ளார்கள். எஞ்சிய ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சித்த மருந்துண்டா’’ என்று அவர் கேட்டார்.

உடனடியாக அருகாமையில் இருந்த நாட்டு மருந்துக்கடைக்கு சென்று தேவையான மூலிகை சரக்குகளை வாங்கி அங்கேயே கஷாயம் காய்ச்சி 3 நாட்கள் 300 ஊழியர்களுக்கு பருக கொடுத்தோம். மறு நாளிலிருந்து சுரத்தினால் விடுப்பு எடுப்பது குறைந்தது. பின்னர் மேலும் சில தொழிற்சாலைகளில் வருடம் தோறும் இரு முறை கொடுப்பதை வழக்கமாக்கி இருக்கிறோம். அங்கெல்லாம் சுரம் வரும் காலங்களில் ஊழியர்கள் சுரத்தால் பாதிக்கப்படாமல் உற்பத்தி அதிகமாவதை தொழிற்சாலை மேலாண்மையினர் சொல்வது உண்டு. நோய் தடுக்கவும், தீர்க்கவும் உதவும்.

இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன்படுத்தலாமா?

ஒரு சிலர் ஆறு மாத காலமாக இதனை தண்ணீருக்கு மாற்றாக பயன் படுத்துவதாக பெருமையுடன் சொல்கிறார்கள்.

இது நிச்சயம் தவறு. அளவுக்கு மிஞ்சினால் குருதி சர்க்கரை குறைவு, ரத்த அழுத்த குறைவு முதலிய எதிர்வினையை ஏற்படுத்தும். இதனால் தலைசுற்றல், மயக்கம் முதலியன ஏற்படலாம்.

ஊரில் சுரம் பலருக்கும் ஏற்படும் காலத்திலும், பருவகால மாற்றத்தின் பொழுது, குறிப்பாக ஆடி மாதம், ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வைரஸ் சுரம் வராமல் இருக்க மூன்று நாள் காலை, மாலை இருமுறை உணவுக்குப்பின் குடிக்க வேண்டும்.

ஒருமுறை குடித்த பின் ஆறு மாத இடைவெளியில் தற்காப்புக்காக குடிக்க வேண்டும்.

நீரை தேற்றான் கொட்டையை இடித்து போட்டு சுத்தம் செய்யலாம், நெல்லிமர கட்டையும் நீர் தொட்டிகளில் போட்டு நீரை சுத்தம் செய்யலாம். இவை இரண்டும் நீரின் கடினத்தன்மையை போக்குவதுடன் நோய் கிருமிகளையும் கொல்லும்.

சீரகம் சேர்த்து மூடி போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறிய நீரை பருகலாம்.

நிலவேம்பை (கஷாயம்) பற்றிய என்னுடைய கேள்வி தொடர்கிறது.

தமிழக வனத்துறை எந்த சித்த ஆயுர்வேத மருந்து செய் நிலையங்களுக்கும் சந்தனம் தராத நிலையில் டாம்ப்கால், இம்ப்காப்ஸ், காந்தி கிராமம் அறக்கட்டளை நடத்தும் எல்.எஸ்.எஸ். நிறுவனம் ஆகியவை மட்டுமே முறைப்படி சந்தனம் பெற உரிமை பெற்று பயன்படுத்துகின்றன.

பல நிறுவனங்கள் சந்தனம் சேர்க்காமலேயே நிலவேம்பு குடிநீர் பொடி தயாரிக்கிறார்கள்.

அதுபோல பேய்புடல் சேர்க்காமல் பாகல் இலையை பயன்படுத்துகிறார்கள்.

சிலர் நிலவேம்பு செடியின் பொடியை மட்டுமே நிலவேம்பு குடிநீர் என்று விற்கிறார்கள். லேபிலில் எல்லா 9 மூலிகைகளின் பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும், தயாரிப்பு உரிமை எண் குறிப்பிடாமல் இருந்தாலும் பொதுமக்கள் வாங்க வேண்டாம். போலி மற்றும் தரம் குறைந்த மருந்தால் நோய் தடுப்பும் நோய் குணமும் கிடைக்காது.

நிலவேம்பு குடிநீர் விலை ஏன் அதிகம் :

நிலவேம்பு குடிநீர் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் சந்தனம் திண்மையான மைய கட்டை சேர்ப்பதுதான். சிலர் லாப நோக்குடன் குறைந்த விலையுடைய மென்கட்டையை பயன்படுத்துகிறார்கள். இரண்டிலும் உள்ள வேதியியல் கூறுகள் வெவ்வேறு என்பது ஆய்வு மூலம் புலனாகும். இந்த சூழலில்தான் காலத்திற்கு ஏற்ப சித்த மருந்துகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தொடர் ஆய்வு தேவை என்பது என் போன்றோர் குரல்.

தமிழக அரசு, இது போன்ற நெருக்கடி நிலையிலாவது சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை வழங்குவது நன்றே.

வெவ்வேறு சுரத்திற்கும் சித்த மருத்துவத்தில் தனித்தனி நோய் போக்கும் மருந்தும் வழிமுறையும் இருப்பதால் சுய மருத்துவம் ஒரு நாளுக்கு மேல் மேற்கொள்ளாமல் மருத்துவரை ஆலோசித்து நோயின்றி வாழுங்கள்.

டாக்டர் டி.திருநாராயணன்

(பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மைய செயலாளர்

சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ஓய்வு)