17 Mar 2016

சர்க்கரை நோய் எப்படி வருகிறது ஒரு உண்மை தகவல்!!

.

Home » தகவல் » மருந்துவம் » சர்க்கரை நோய் எப்படி வருகிறது ஒரு உண்மை தகவல்!!

சர்க்கரை நோய் சம்பந்தமான ஒரு பெரிய வரலாற்று உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சர்க்கரை நோயினால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1921-ல் கனடாவில் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த டாக்டர் ஃபிரடெரிக் பான்டிங், தன்னுடைய மாணவர் டாக்டர் பெஸ்ட் உடன் சேர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில், நாயின் கணையத்திலிருந்து 'இன்சுலின்’ என்கிற ஹார்மோனை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்தார்.

இந்தச் சாதனை, மருத்துவ உலகில் ஒரு மகத்தான புரட்சியாக அமைந்தது. பின்னர், பசு, பன்றி ஆகியவற்றின் கணையத்திலிருந்தும் இன்சுலின் எடுக்கப்பட்டு, தற்போது மரபணு தொழில்நுட்பத்தில் (Genetic Engineering) உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றி வருகிறது.

இந்த அரிய கண்டுபிடிப்புக்காக, 1923-ல் தன்னுடைய 32-வது வயதிலேயே நோபல் பரிசு பெற்றார் டாக்டர் பான்டிங். ஆனால், இவர் செய்த இன்னொரு மிக முக்கியமான ஆராய்ச்சியை உலகம் மறந்துவிட்டது - அல்லது மறைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் வேதனையான விஷயம்.

நூற்றுக்கணக்கான ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்த பண்ணையார்கள்/ஜமீன்தார்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு, தங்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, வெள்ளைச் சீனியையே உபயோகித்தார்கள். ஆனால், இவர்களின் கரும்புத் தோட்டத்தில் வேலை செய்த கூலித்தொழிலாளிகளோ, தங்கள் சக்திக்கு ஏற்ப கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைத்தான் சொந்தத்துக்கு உபயோகித்தார்கள்.

பண்ணையார்கள்/ஜமீன்தார்கள் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகவும், கூலித்தொழிலாளிகளின் குடும்பத்தினரிடையே சர்க்கரை நோயின் தாக்கம் குறைவாகவும் இருப்பதை டாக்டர் பான்டிங் கண்டுபிடித்தார். இந்த அரிய கண்டுபிடிப்பு...

உலகத்தின் பார்வையில் படாமல் ஏனோ இருட்டடிப்பு செய்யப்பட்டு, நூல் நிலையங்களுக்குள் வரலாற்றுச் சுவடிகளில் புதைக்கப்பட்டுவிட்டது.

பான்டிங்கின் இன்சுலின் கண்டுபிடிப்புக்குக் கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம், 'வெள்ளைச் சீனியால் சர்க்கரைநோய் அதிகம் வரும், ஆனால்... கருப்பட்டி, வெல்லம் போன்றவற்றைச் சாப்பிட்டால் பாதிப்பில்லை' என்கிற அவரின் அரிய கண்டுபிடிப்புக்கும் கொடுக்கப்பட்டிருந்தால், இத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோயே வந்திருக்காது என்று எனக்குத் தோன்றுகிறது! காரணம், சர்க்கரை நோய் பணக்காரர்களின் நோயாகவே இதுவரை கருதப்பட்டது. தற்போது அந்த நிலை மாறி சாமான்யர்களுக்கும் அந்நோய் வருவதைக் காண்கிறோம்.

சாமான்யர்களும் கருப்பட்டிக்குப் பதிலாக வெள்ளைச் சீனியையே உபயோகப்படுத்த ஆரம்பித்ததன் விளைவுதான் இது என்பதைத்தானே பான்டிங் அப்போதே தன் ஆராய்ச்சியில் கூறினார்!இனி, இன்றைய ஆராய்ச்சிக்கு வருவோம். அமெரிக்காவில், கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், குழந்தைகள் அகச் சுரப்பியல் (Pediatric Endocrinology) நிபுணராகப் பணியாற்றும் டாக்டர் ராபர்ட் லஸ்டிக் என்பவர், சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் நம் ஊர் டாக்டர் சஞ்சய் பாசுவும் இந்த ஆராய்ச்சி யில் இணைந்து பணியாற்றினார். 2000 - 2010 ஆண்டுகள் வரை, 175 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஒவ்வொரு நாட்டிலும் உற்பத்தியாகும்/இறக்குமதியாகும்/விற்பனையாகும் சர்க்கரையின் அளவுக்கும், சர்க்கரை நோய்த் தாக்கத் துக்கும் உள்ள தொடர்புதான் இந்த ஆராய்ச்சியின் கருப்பொருள்.

ஒவ்வொரு 150 கலோரி சர்க்கரைக்கும் (அதாவது 9 ஸ்பூன் சர்க்கரை அல்லது ஒரு கோலா பாட்டிலில் உள்ள சர்க்கரை) சர்க்கரை நோயின் தாக்கம் 1 சதவிகிதம் அதிகரிக்கிறது.

அதேசமயம், மற்ற வகை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு 150 கலோரிக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் வெறும் 0.1 சதவிகிதம்தான் கூடுகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளை 'நியூயார்க் டைம்ஸ்’ போன்ற பிரபல பத்திரிகைகள் பிரசுரித்தன. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் வால்டர் வில்லட், யேல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டேவின் காட்ஸ் ஆகியோரும் இவருடைய கருத்துக்களை ஆதரித்தனர்.

ஆனால், எதிர்பார்த்தபடியே மேலை நாட்டின் சக்திவாய்ந்த சர்க்கரை ஆலை அதிபர்கள், கோலா, சாக்லேட் நிறுவனங்கள் இந்தக் கருத்தை கடுமையாக எதிர்த்தார்கள். இவர்களின் ராட்சத பணபலத்துக்கு முன்பாக அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகமும், பிரிட்டிஷ் சர்க்கரை நோய்க் கழகமும் அடிபணிந்தன.

இன்றைய நவீன மருத்துவத்தை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்றுக்கொண்ட நாங்களும், ஆங்கிலேயர்களின் கருத்தையே வேதவாக்காக எடுத்துக் கொண்டு, சர்க்கரையின் பல்வேறு கேடுகளையும் உணராமல்/கண்டுகொள்ளாமல் மூடிமறைக்கிறோம் என்பதுதான் உண்மை.ஆனால், டாக்டர் ராபர்ட் லஸ்டிக் இதோடு விடவில்லை. அவருடைய ஆராய்ச்சியில் கலந்துகொண்ட 175 நாடுகளில், 4 நாடுகள் சுதாரித்துக்கொண்டன.

தென்கொரியா, பங்களாதேஷ், அல்பேனியா, நைஜீரியா அகிய அந்த 4 நாடுகளும் சர்க்கரை இறக்குமதியை/இருப்பை வெகுவாகக் குறைத்தன. விளைவு உடனே தெரிய ஆரம்பித்தது. இந்த 4 நாடுகளிலும் புதிய சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைய ஆரம்பித்தது என்கிற உண்மையை, டாக்டர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுவரை அவர் சொன்னதெல்லாம், காதுகேளாதவர்களின் காதில் ஊதிய சங்கு என்று இருந்த நிலையில், சிலருக்கு மட்டும் இந்த அபாயச் சங்கு ஒலி மிகவும் தெளிவாகக் கேட்டது. ஆம்... அமெரிக்க இதயநோய்க் கழகம் (American Heart Association) இவருடைய கண்டுபிடிப்புகளை முழுமனதோடு ஏற்றுக்கொண்டது. அதோடு நின்றுவிடாமல் அமெரிக்க மக்களுக்கு ஓர் பரிந்துரையும் வெளியிட்டது.

'ஆண்கள் 9 ஸ்பூன் சீனியும், பெண்கள் 6 ஸ்பூன் சீனியும் மட்டுமே தினமும் உணவில் சேர்க்க வேண்டும்’ என்பதே அது. அதென்ன ஆணுக்கும் பெண்ணுக்கும் அப்படி ஒரு வித்தியாசம்? சர்க்கரையால் ஏற்படும் உடல்பருமன் நோயின் தாக்கம் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகம் என்பதே காரணம்.உலக சுகாதார மையமும் (WHO -World Health Organization) சற்று விழித்துக் கொண்டது.

உணவில் சுத்த சர்க்கரையின் அளவு 10 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அது எடுத்தது.'6, 9 ஸ்பூன் சீனிதானே? அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நம் ஊரில் காபி, டீயில் 2 ஸ்பூன் சர்க்கரை வீதம் 2 - 3 வேளை எடுத்தாலும் இந்த உச்சவரம்பைத் தாண்டாது. அதனால், சீனியினால் நேரடி பாதிப்பு நம் ஊர் மக்களுக்குக் கிடையாது’ என்று பிரபல சர்க்கரைநோய் நிபுணர்களே இப்போதும் கூறிவருகிறார்கள்.

ஆனால், இந்த விஷயத்தில் எல்லோரும் கவனிக்கத் தவறும் உண்மை என்னவென்றால் - சர்க்கரை மாறுவேஷத்தில் பல உணவுகளில் ஒளிந்திருக்கிறது (hidden sugar) என்பதுதான். கோலா பானங்கள், சாக்லேட்டுகள், பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள், ஜாம், ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள் இன்னும் இத்யாதி இத்யாதி... எல்லாவற்றிலும் ஒளிந்திருப்பது சீனிதானே? இவற்றை அன்றாடம் உண்ணும் இன்றைய குழந்தைகளும் இளையதலைமுறையினரும் உடல் பருமன் நோய்க்கும், மெட்டபாலிக் சிண்ட்ரோம் நோய்க்கும் ஆளாவதில் என்ன ஆச்சர்யம்?

சிங்கப்பூர் அரசாங்கம் 1991-ல் ஓர் அதிரடிச் சட்டம் இயற்றியது. பள்ளிகள், இளைஞர்கள் விடுதிகள் போன்ற இடங்களைச் சுற்றி கோலா பானங்களும், மேலே குறிப்பிட்ட மற்ற இனிப்பு பதார்த்தங்களும் விற்பனை செய்வதை தடை செய்தது அந்தச் சட்டம். அமெரிக்காவில், நியூயார்க், கலிஃபோர்னியா மற்றும் பல மாகாணங்களில் இதே மாதிரிச் சட்டம் சென்ற ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.நம் மத்திய அரசும் சென்ற மாதம் தன் பங்குக்கு ஓர் அறிவிப்பு வெளியிட்டது.

'கல்வி நிறுவனங்கள் அருகில் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகளும் பானங்களும் விற்பனை செய்வது தடைசெய்யப்படும்’ என்றது அந்த அறிவிப்பு மொத்தத்தில் இப்போது பலருடைய காதுகளில் சர்க்கரையின் அபாயச் சங்கொலி கேட்க ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலான விஷயம்தானே!

14 Mar 2016

சர்க்கரை நோய்க்கு சர்க்கரையே மருந்து

இநஎன்னங்க! தலைப்பை பார்த்தவுடனேயே அதிர்ச்சியா இருக்கா? இந்த 21-ஆம் நூற்றாண்டிலும் இப்படி பைத்தியக்காரத்தனமாக எழுதுகிறாரே? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் எனது அனுபவத்தில் நானே ஒரு சர்க்கரை நோயாளியாக இருப்பதால் எனது அனுபவத்தை எழுதுகிறேன் அவ்வளவுதான்.

இந்த சர்க்கரை நோயை எந்த மருத்துவ முறைகளினாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. அது ஆங்கில மருத்துவமானாலும் சரி, ஆயுர்வேதா, சித்தா, யூனானி, ஹோமியோபதி மருத்துவ முறைகள் ஆனாலும் சரி. கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் அவ்வளவுதான். சர்க்கரை நோயை (நிரிழிவு) சர்க்கரை நோய் என்றும், உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் பரவயுள்ள ஒரு ஆட்கொல்லி நோய் என்றும் கூட சொல்லலாம். எய்ட்ஸ் நோயைவிட இந்த நோய் கொடியது.

1986 ஆம் ஆண்டு பால் லாங்கர் ஹான்ஸ் என்பவர்தான் முதலில் கணையத்தில் ஜலட்னின் என்னும் பகுதியைக் கண்டுபிடித்தார்.இக்கண்டுபிடிப்புதான் நீரிழிவு நோய் சரித்திரத்தில் ஒரு பெரிய மைல் கல்லாக கருத்தப்படுகிறது. இந்த ஜலெட்ஸ் அவரது கண்டுபிடிப்பு என்பதால் அவரது பெயரிலேயே ஜலெட்ஸ் ஆப் லாங்கர் ஹான்ஸ் என அழைக்கப்படுகிறது. 

சித்த மருத்துவம் என்பது ஒரு பெரும் கடல். அதையெல்லாம் நான் விவரிக்க விரும்பவில்லை. நீரிழிவிற்கும், கணையத்திற்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்தவர்கள், வான்பெரிங் மற்றும் மின்கோஷி என்பவர்கள். இவர்கள் நடத்திய ஆய்வில் கணையம் நீக்கப்பட்ட நாய்கள் தங்களால் உயிர்வாழ முடியாமல் நீரிழிவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. நாம் உண்ணும் உணவு வழியாக உடலினுள் வரும் சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாக கலந்து இருக்கும் நிலையைதான் நிரிழிவு (சர்க்கரை நோய்) என்று கூறுகிறோம். அடுத்து சிறுநீரில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் அது நீரிழிவாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

நிரிழிவு நோய் ஏன், எப்பொழுது ஏற்படுகிறது என்று திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை. உடல் நலக்குறைவு, அதிக எடை, பாரம்பரியக்குறைபாடு, உடற்பசியின்மை, கணையத்தின் சுரப்புக் கோளாறு போன்றவை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மனிதர்களின் இக்கால வாழ்க்கை முறைகள்தான சர்க்கரை நோய் வருவதற்கு காரணம். கணையம் செயல் அழந்து இன்சுலின் சுரக்காமல் இருந்தால் மன அழுத்தம், உடல் பெருத்தல், உடற்பயிற்சி இன்மை, உணவு பழக்க வழக்கங்கள், மதுபான பழக்கம், போதிய தூக்கம் இன்மை போன்ற காரணங்களால் கணையம் செயல் இழந்து இன்சுலின் சுரப்பின் அளவு குறைவு ஏற்படுகிறது. மற்றும் கண்பார்பை குன்றுதல், காலில் அரிப்பு, இருதய நோய் ஏற்பட்டு மாரடைப்பு வருகிறது. கிட்னியும் பாதிப்படைகிறது.

உடலில் இரைப்பைக்கு கீழே பின்புறத்தில் இலைவடிவத்தில் உள்ள பான்கிரியாஸ் என்பதற்குதான் கணையம் என்று பெயர். இதில் நூற்றுக்கணக்கான பிட்டா செல்கள் உள்ளன. இந்த செல்கள்தான் இன்சுலினைச் சுரக்கிறது. நாம் அதிக இனிப்புள்ள உணவுகளை உண்ணும்போது அதில் சர்க்கரையின் உளவு இரத்தத்தில் கலக்கிறது. இந்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்த உடலில் உள்ள இன்சுலின் சுரக்கிறது. தேவையான சர்க்கரை அளவை வைத்துக் கொண்டு மீதியை சக்தியாக மாற்றித் தருகிறது. இது நடக்கவில்லையென்றால் சர்க்கரையின் அளவு மிகுதிப்பட்டு வருகிறது.

மேலே நான் எழுதிய செய்திகள் எல்லாம் அறிவியல் பூர்வமாக கண்டறியப்பட்ட உண்மைகள், யாராலும் மறுக்க முடியாது. ஆனால் என் வாழ்க்கையில் நடைபெற்றுவரும் உண்மைகளைக் கூறுகிறேன். எனக்கு இப்போது 83 வயது நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டது. எனது புதல்வர் என்னை அழைத்துக் கொண்டு பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உடல் முழுவதும் பரிசோதனைகள் செய்து ஸ்கேன், எக்ஸ்ரே, சிறுநீர், இரத்தப் பரிசோதனைகள் என்று பல பரிசோதனைகள் செய்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு.

கடைசியாக இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரை அதிகமாக உள்ளது என்று கூறினார்கள். இரத்தத்தின் சர்க்கரை அளவு 380, சிறுநீரில் சர்க்கரையின் அளவு +++ என்ற ரிசல்ட்டைக் கொடுத்தார்கள். டயாமைக்ரான் அம்.ஆர். என்ற மாத்திரை கொடுத்தார்கள். அனுதினமும் காலையில் சாப்ப்பிட்ட பிறகு 1 மாத்திரை சாப்பிட வேண்டும் என்று கூறினார்கள். அத்துடன் ஆகாரக் கட்டுப்பாடு முறை சீட்டை ஒன்றும் இனிப்பு வகைகளைச் சாப்பிடக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் என்னை அனுப்பி வைத்தார்கள். -

கடந்த 5 ஆண்டுகள் விடாமல் டயாமைக்ரான் மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். சர்க்கரையின் அளவு நார்மலாகத்தான் இருக்கிறது. ஆனால் உடல் அசதி, பலவீனம் அதிகமாக இருந்தது. உற்சாகம் இல்லை. இந்த சூழ்நிலையில் ஒரு சில வருடங்கள் இனிப்புச் சேர்க்காமல் ஆகாரக்கட்டுப்பாடுகளுடன் இருந்து வந்தேன். எனது உடல் பலவீனம் குறையவில்லை. ஆனால் சர்க்கரையின் அளவு நார்மலாகவே இருந்து வந்தத்து.

என்னிடம் இருந்த சித்த மருத்துவ ஏட்டுச் சுவடிகளில் புரட்டிப் பார்த்தேன். நீரிழிவு நோய்க்கு ஆலம் விழுது சிறந்த மருந்து என்னும் குறிப்பு இருந்தது. மறு நாளிலிருந்தே ஆலம் விழுதை ஒரு கைபிடி அளவு பிடுங்கி மிக்ஸியில் போட்டு சிறிது மோர்விட்டு கடைந்து அதில் வரும் சாற்றை எடுத்து அனுதினமும் அதிகாலையில் 5 மணிக்கு ஆகாரத்திற்கு முன்பு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டேன்.

அடுத்து இரண்டு மாதங்கள் இடைவெளிவிட்டு கொம்பன் பாவற்காய் (நீளமாக இருக்கும்) அதில் ஒரு காயை எடுத்து இரண்டாகப் பிளந்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலந்து ஆகாரத்திற்கு முன்பு காலையில் மட்டும் 1வேளை சாப்பிட்டேன். தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு முடித்தேன். அடுத்து முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும். விஷத்தை விஷத்தால்தான் முறிக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த மூலப்பொருளிலிருந்து ஒரு நோய் உண்டாகிறதோ அந்த மூலப் பொருளைக் கொண்டே அந்த நோயைக் குணப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை என் மனதில் உருவானது. எனவே மறு நாளிலிருந்து காபி, டீ-யில் இனிப்புகள் கலந்து சாப்பிட ஆரம்பித்தேன். இடியாப்பம், ஆப்பம், உப்புமா, தோசை எல்லாவற்றிலுமே சீனியுடன் பாலும் கலந்து சாப்பிட ஆரம்பித்தேன். அனுதினமும் லட்டு, ஜிலேபி, கேக் என்று மாலையில் டிபன் சாப்பிடும் சமயம் சாப்பிட்டு வருகிறேன்.

எனக்கு உடம்பில் தெம்பு ஏற்பட்டு உற்சாகமாக செயல்படுகிறேன். எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. ஆனால் எந்தக் காரணம் கொண்டும் டயாமைக்ரான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். சர்க்கரையின் அளவு நார்மலாகவே இருந்து வருகிறது. இதிலிருந்து நான் கண்ட உண்மை, 'சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன்'. இது என்னுடைய உடல்நிலைக்கு பொருந்துகிறது'. எனக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலையை போல் மற்றவர்களுக்கும் மாற்றம் ஏற்படுமா? என்பதை உறுதி சொல்ல முடியாது. மற்றவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

மருத்துவ மேதைகளுக்கு ஒரு விண்ணப்பம். எனது கருத்துகளில் தவறு இருந்தால் எனக்கு விளக்கம் அளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். எனது நண்பர்கள் பலருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு அனுதினமும் இன்சுலின் ஊசிகளும் போட்டு மாத்திரைகளும் சாப்பிட்டுக் கொண்டுதான் வருகிறார்கள். எனது நண்பர்களில் இரண்டு பேருக்கு கால்விரல் துண்டிக்கப்பட்டு புண் ஆறாமல் சிகிச்சை செய்து கொண்டு வருகிறார்கள்.

எனக்கு மட்டும் ஏன் குணமாகி வருகிறது என்பதை என்னால் ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. எனக்கு தற்போது 83 வயதாகிறது. இன்னும் கண்ணுக்கு கண்ணாடி அணியவில்லை. தலைமுடி நறைக்கவில்லை. ஊசியில் நூலை சர்வசாதாரணமாக கோர்த்து விடுகிறேன். என்னைப் பார்த்து எல்லோரும் 'என்னை ஒரு விந்தை மனிதன்' என்றே போற்றி வருகிறார்கள்.

என்னுடைய பழக்கவழக்கங்கள்:

1984ஆம் ஆண்டிலிருந்து வெள்ளிக்கிழமைதோறும் உபவாசம் இருந்து வருகிறேன். அனுதினமும் காலையும், இரவும் தவறாது பைபிள் வாசித்து ஜெபித்து வருகிறேன். பீடி, சிகரெட், மது, போதைபொருட்கள் எதுவும் உபயோகிக்க மாட்டேன். டிவி. சினிமா பார்ப்பது இல்லை. பைபிளில் உள்ள சிறிய எழுத்துக்களையும் இரவில் சர்வ சாதாரணமாக வாசிப்பேன். 

என்னைப் பார்க்கிறவர்கள் நான் 83 வயது என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். உங்களுக்கு 60 அல்லது 65 தான் இருக்கும் நீங்கள் தவறாகச் சொல்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் என்ன சொல்வது. என்னுடைய பழக்கவழக்கங்களினால் எனக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்குமோ என சிந்திக்கிறேன். எப்படியோ, நான் நல்ல சுகத்துடன் வாழ்ந்து வருகிறேன். சர்க்கரை இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. என்னைப் போலவே அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையும் கூட.

குறிப்பு: சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு குறையும்போது தலைச்சுற்றல் மயக்கம் ஏற்படுகிறது. டாக்டர்களிடம் கேட்டால் சீனி, அல்லது சாக்லேட்டை வாயில் போட்டு சுவைத்து சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். அப்படிச் சாப்பிடும்போது தலைச்சுற்றல் மயக்கம் உடனே மாறி விடுகிறது ஏன் என்பதை சிந்தியுங்கள். எனவே சர்க்கரை மனித வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது என்ற உண்மை புலப்படுகிறது.

தொடர்புக்கு...

தலைமை நிலையம்:

சித்த மருத்துவ மேதை லயன் டாக்டர் A. தேவராஜன் R.M.P. (IND) C.B.I.M.,
மனோன்மணி மருத்துவமனை,
7-3/125, பெருமாள் கோவில் தெரு, 
பேரையூர் P.O.(T.K.), மதுரை - 625 703. 

தொலைபேசி:  04549 - 275695, செல்: 94437 75695
இமெயில்: maduraidevarajan@gmail.com

மதுரை:

ஹோமியோ ஹோம் / பிரிதா ஹோமியோ கிளினிக்,
S-7, கிங்ஸ் கோர்ட், அன்னபூர்ணா லாட்ஜ் அருகில், 
ஜோதி ஆப்டிக்கல்ஸ் மாடியில், 
அண்ணா பஸ் ஸ்டாண்ட்,  மதுரை - 20. 

தொலைபேசி:  0452 - 4393722, செல்: 94430 25213

(வேலை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை)

நீரிழிவு (சர்க்க‍ரை) நோய் – விரிவான அலசல்

 நீரிழிவு நோய்

நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாகமாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற் பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட் டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடை வில் அடைபடுதல் இதயத் தசைகளுக்கு இரத்த‍ம், வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பக்க‍ வாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது.

நீரிழிவில் மூன்று வகைகள்:

முதலாவது வகை நீரிழிவு(Type I Diabetes):

நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர்ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொ ண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர் களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந் திருக்கின்றன. முதலாவதுவகை நீரிழிவு உதா ரணமாக 10%தினருக்கு ஏற்படு கின்றது.

இரண்டாவது வகை நீரிழிவு (Type II Diabetes)

இன்சுலின் சுரப்பிகள் போதியளவு இன்சுலின் சுரக்காதாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சு லின் தகுந்த முறையில் செயல் பட முடியாத தன்மையாலோ ஏற்படு கின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத் தட்ட 90 விகித்த தினரில் காணப்படுகிறது. இந்த வகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறு வார்கள். இந்த வகை அதிக உடற் பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரழிவை நிறைகுறைவதாலும் சாப்பாட்டுக கட்டுப்பாட்டா லும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டு ப்படுத்தலாம்.

மூன்றாவது வகை நீரிழிவு (Type III Diabetes):

மூன்றாவது வகையான கர்பகால நீரிழிவானது 2% முதல 4%மானபெண்களுக்கு கர்பகாலத்தின்போது ஏற்படுகி றது. குழந்தை பிறந்தவுடன் மறைந்து விடுகி றது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கை யில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத் திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதி யில் கலக்கிறது.

நீரிழிவு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும்45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம் பரையில் நீரிழிவு நோய் இருப்பவர் கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகிய வர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.

நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?

பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது.

சில பொதுவான அறிகுறிகள்:

1. அடிக்கடி சிறுநீர் கழிப்பது

2. அடிக்கடி தாகம்

3. அதிக பசி

4. மிக வேகமாக எடை குறைதல்

5. அதிகமாக சோர்வடைவது

6. கண்பார்வை மங்குதல்

7. வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்

8. திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்றுநோய்

நீரிழிவை கவனிக்காததால் விளைவு கள் என்னென்ன?

இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை. நீரிழிவை துவக்கத் திலேயே கவனிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி விடு ம். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்பு களையும் செயல்பாடுகளையும் பாதித்துவிடும்.

பார்வை இழப்பு

மாரடைப்பு

சிறுநீரகக் கோளாறு

பக்கவாதம்

கால்களை இழத்தல்

கோமா மற்றும் இறப்பு

நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?

நீரிழிவு நோயின் சிகிச்சையில்:

1. உணவுமுறை

2. உடற்பயிற்சி

3. நோயின் தீவீரத்தைத் தவறாமல் கண் காணித்தல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல்

4. இன்சுலின் பயன்படுத்துதல்

மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் எடுத்துக் கொள்வதால் நீரிழி வைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். உங்களுக்கு நீரிழிவு இருந் தால் அதைக் குணப்படுத்த முடியாது. எனவே குணப்படுத்துவதாகச் சொல் லி ஏமாற்றுபவர்களின் வலையில் விழுந்து விடாமல் கவனமாயிருக்க வேண்டும்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் விரதம் இருக்கலாமா?

நீரிழிவு நோய்க் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நீங்கள் விரதம் கடைப் பிடிக்க விரும்பினால் முதலில் உங்கள் மருத் துவரை சந்தித்து ஆலோசிக்கவும். அவர் உடல்நிலைக்கேற்ப உணவு முறைக ளையும் மருந்துகளையும் தெரிவிக்க லாம்.

நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள்

ங்கள் மருத்துவரிடம் உங்களுக் காக ஒரு உணவு அட்டவணை யைத் தயார் செய்யச் சொல்லுங்கள். அது திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான சலிப்படையச் செய்யும் வகையில் இருக்காது. ஒருவருடைய தேவைக் கேற்பவும் விருப்பத்திற்கேற்பவும் பல மாற்று உண வு வகைகளை நீங்கள் சேர்த்துக் கொள்ள முடியும்.

1. உணவு முறை:

1. சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி , அரிசி, கேழ்வரகு போன்ற கார்போ- ஹைட் ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிடுங்கள். இவைக ளால் செலவுகளுமில்லை. நீங்கள் பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங் கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தி விடுங் கள்..

2. கொஞ்சமாகவும், நேரம் தவறாமலும் சாப்பி டவும். சாப்பாட்டு நேர இடைவெளியில் குறிப் பிட்ட சில பழங்கள் அல்லது காய்கறிகள் போன்ற சத்துள்ளவற்றைச் சாப்பிடவும்.

3. கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் தாவர எண்ணெய்யைப் பயன் படுத்தவும்.

4. சமையல் முறையை மாற்றி, வேக வைத்த, தீயில் வாட்டிய, நீராவியில் சமைத்த பதார்த்தங்க ளைச் சாப்பிடு ங்கள்.

5. கொழுப்பு நிறைந்தவற்றை அதிகம் சாப்பிடக்கூடாது. கொழுப்பு பதார்த்த ங்களான நெய், வெண்ணெய், பொறித் தவைகளான பூரி, சமோசா போன்ற வற்றை தவிர்க்க வேண்டும். கொழுப் பு மிக்க இறைச்சி, வெண்ணெய் மற்றும் பொறித்த உணவு வகைக ளைத் தவிர்க்க வேண்டும்.

6. சர்க்கரை, வெல்லம், தேன், ஜாம், கேக்கு கள் மற்றும் சாக்லேட்கள் போன்ற சர்க்கரைச் சத்து அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

7. மீன், கோழி, பாலாடைக்கட்டி மற்றும் ஸ்டார்ச் சத்துள்ள பதார்த்தங்களைக் குறைவாகச் சாப்பிட வேண் டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

About these ads

13 Mar 2016

கர்ப்பகாலத்தில் சித்த மருத்துவம்...

November 26, 2014

மகப்பேறு காலத்தில் உணவு முறை, 

வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.

இந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.

முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

இக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்.

இக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.

இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.

கொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.

ஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவற்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

ஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.

 

நன்றி: சிவகுமாரின் சித்த மருத்துவம்