21 Dec 2015

உங்க மனைவியை எப்போதும் ஹாப்பி யா வச்சிருக்க சில வழிகள்

உங்கள் வாழ்க்கை இன்பமாக அமையும்படியும் மாற்றும் திறன் உங்களிடம் தான் இருக்கிறது. அலுவலகம் சென்றவுடன், கீபோர்டை தட்டிவிட்டு கிளம்பும் கணினியை போல இல்லாது, ஆறறிவு கொண்ட மனிதனாக நடந்துக் கொள்ள வேண்டும்

எப்போதும் கொடுத்து பழக வேண்டும், வாங்கி பழக கூடாது. எனவே, உங்கள மனைவி ஆரம்பிப்பதற்கு முன்பே, நீங்கள் அவரை புகழுதல், பாராட்டுதல், காதல் வார்த்தைகள் பேசுதல், கொஞ்சுதல் என தொடங்கிவிட வேண்டும். தினம் தினம் இல்லையெனிலும் கூட, குறைந்தது வார இறுதியிலாவது அவரிடம் அன்பாக, பாசமாக அவருக்கென நேரம் ஒதுக்க வேண்டும்.

அவரவருக்கு அவரவர் தங்கள் மனைவியே ரம்பை, ஊர்வசி, மேனகை. இதை மனதில் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அவ்வப்போது அவர்களது காதில் விழும்படி உரைக்கவும் வேண்டும். யார் கூறாவிட்டாலும், தனது கணவன் தன்னை அழகு என கூறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லா பெண்களிடமும் இருக்கும்.

 

வீட்டில் என்ன தான் மனைவி நன்றாக சமைத்தாலும், நொட்டைப் பேச்சு பேசுவது என்பது தான் ஆண்களுக்கு தெரிந்த ஒரே விஷயம். இது தாத்தாவில் இருந்து பேரன் வரை அனைவரும் கடைபிடிக்கும் செயல். இதை விடுத்து, அவர்களது சமையல் நன்றாக இருக்கிறது என்று அவர் பரிமாறும் போது ஒரு வார்த்தை புன்னைகையோடு கூறி பாருங்கள். நாளையில் இருந்து சமையலோடு சேர்ந்து காதலும் கமகமக்கு

 

 

நீ எனக்கு மனைவியாய் அமைந்ததை நினைத்து பெருமை அடைகிறேன். நீ எனக்கு கிடைத்த பெரும் வாழ்நாள் பரிசு என்று கூறிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். நாளை முதல் இல்லற வாழ்க்கையில் நிறைய சிறு சிறு மாற்றங்கள் தெரியும், சண்டைகள் குறையும்.

28 Sept 2015

போட்டோசாப் பாடம் 79 எளிதாக விளம்பர போர்டு உருவாக்குவது எப்படி ?

பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி ! இந்த பாடத்தில் போட்டோசாப் மென்பொருள் மூலம் எளிதாக விளம்பர போர்டுகள் டிசைன் செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.  நீங்கள் விளம்பர போர்டு எழுதும்பொழுது அதன் தெளிவான கலர் செலெக்சன் மற்றும் லேயர் வடிவமைப்பு உருவாக்குவது பற்றி எதுவும் அறியாதவரா ? உங்களுக்காகவே இந்த பதிவு.

























































































































































































































































17 Sept 2015

சித்த மருத்துவம் தரும் பட்டயப் படிப்புகள்

Updated: September 15, 2015 12:09 IST | புரவி
   

நோயாளியிடமிருந்து எடுக்கப்படும் மருத்துவக் குறிப்புகள் நோயாளியின் வர்ணனையை ஒட்டி இருக்கும். இன்றைய மருத்துவ அறிவியலின் முன்னேற்றம் காரணமாக, தொழில்நுட்பக் கருவிகள் பெருகப் பெருக அவற்றால் செய்யப்படும் பரிசோதனையின் முடிவுகளே நோயின் அறிகுறிகள் என்றாகிவிட்டன.

நோய் தாக்குண்ட நோயாளியின் அனுபவம் வேறு. அவருக்கு மருந்து அளிக்கும் மருத்துவரின் அறிவு வேறு. இந்த இரண்டையும் இணைக்கும் புள்ளிதான் மருத்துவம். அதிலும் நோய் நாடி நோய் முதல் நாடும் பழங்கால வைத்தியமுறையாக நம்மிடையே இன்றைக்கும் இருப்பது சித்த மருத்துவம். ஏனைய மருத்துவ முறைகளிலிருந்து மாறுபட்டுள்ள, நமது பாரம்பரியமான மருத்துவ முறையான சித்த மருத்துவம் குறித்த படிப்புகளைப் படிக்கும் ஆர்வம் தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகம் வளர்ந்துள்ளது.

இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் தமிழக அரசின் சுகாதாரத் துறையின்கீழ் வருகின்றன.

இதில் இரண்டரை ஆண்டுகள் படிக்கும் மருந்தாளுநர் D.I.P (Diploma in Pharmacy), D.N.T (Diploma Nursing Therapy) பட்டயப் படிப்புகளுக்கு வரவேற்பு கூடியுள்ளது. இந்தப் படிப்புகள் சென்னை, அரும்பாக்கத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையிலும் இருக்கும் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகளில் கற்றுத் தரப்படுகின்றன. நர்சிங் படிக்கும் மாணவர்களுக்குக் களப்பயிற்சியும் வழங்கப்படுவது சிறப்பு.

கல்வித் தகுதி

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலோ அல்லது இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களிலோ பிளஸ் 2 அல்லது சி.பி.எஸ்.சி அல்லது அதற்கு இணையானவற்றில் தேறியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40 சதவீதம், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 சதவீதம் மதிப்பெண்களும் எடுத்திருக்க வேண்டும்.

சித்த மருத்துவப் படிப்புகளுக்காக அணுக வேண்டிய முகவரி:

அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627 002.

அறிஞர் அண்ணா அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரும்பாக்கம், சென்னை.

4 Jul 2015

I love My Thiruvannamalai திருவண்ணாமலை மகிமை...

பூமியின் இதயமாக விளங்கி வரும்
திருவண்ணாமலையை அருணையம்பதி,
முக்திபதி, சோணாசலம், அருணாசலம்
என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள். சுமார்
2664 அடி உயரமுள்ள
திருவண்ணாமலையை தட்சண கைலாசம்
என்று கூறுவதுண்டு.

திருவண்ணாமலை பல மலைகள் இணைந்த
ஒன்றாகும். இந்த மலைகளை வலம்
வருவதற்கு 14 கிலோமீட்டர்
நீளப்பாதை உள்ளது. திருவண்ணாமலை,
சிவபெருமானின் அருவ வடிவமாகும்.
மலையின் அடிவாரத்தில் 25 ஏக்கர்
நிலப்பரப்பில், அண்ணாமலையார் ஆலயம்
அமைந்துள்ளது. விண்ணுயர நிற்கும்
ராஜகோபுரம் கோவிலின் கிழக்கில்
அமைந்துள்ளது.

அது 216 அடி கொண்டதாக 11
நிலைகளுடன் உள்ளது. விஜயநகர மன்னர்
கிருஷ்ண தேவராயர் அண்ணாமலையார்
கோவிலின் ராஜகோபுரத்தைக் கட்டினார்.
இக்கோவிலில் 9 கோபுரங்கள் உள்ளன.
இங்கு சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்
என இரு தீர்த்த குளங்கள் உள்ளன. 56
திருச்சுற்றுகளைக்
கொண்டது திருவண்ணாமலைத்
திருக்கோவில்.

கருவறைத் திருச்சுற்றில் 14 லிங்க
மூர்த்தங்களும், 63 நாயன்மார்களும்,
சிவனடியார்களும், சப்தமாதர்களும் தெய்வ
மூர்த்தங்களும் இடம் பெற்றுள்ளனர்.
கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறையில் வட்டவடிவமான
ஆவுடையார் மீது லிங்க
உருவிலே அண்ணா மலையார் எழிலாகக்
காட்சி தருகின்றார்.

அவரை பிரதட்சிணமாக வந்து இடப்புறம்
சென்றால் அம்மன் சன்னதியைக் காணலாம்.
சன்னதியிலுள்ள மண்டபத்தூண்களில
அற்புதமான சிற்ப வேலைபாடுகள்
சிந்தையை நிறைக்கின்றன.
உண்ணாமுலை அம்மனை தரிசித்துவிட்டுஅங்குள்ள
நவக்கிரகங்களையும் சுற்றி வந்தால் நலன்
கோடி விளையும்.

திருவண்ணாமலைத் தலத்தில்
மலையே சிவன். சுயம்புவாக எழுந்த
அக்னிமலை நாளடைவில் கல் மலையாக
மாறியது. இம்மலையில் உள்ள செடி,
கொடி, மரங்கள் யாவுமே மருத்துவப்
பயனுள்ள மூலிகைகளாகும். மலையில்
பல குகைகள் உள்ளன. சிறியதும்,
பெரியதுமாக உள்ள இந்த குகைகளில்
துறவிகளும், முனிவர்களும், சித்தர்களும்
தவநிலையில் வீற்றிருப்பதைக்
காணமுடியும்.

பிரசித்தி பெற்ற அக்னித்தலமான
திருவண்ணாமலையில் நாள்தோறும்
திருவிழாக் கோலம்தான். கார்த்திகை மாதம்
பவுர்ணமி தினத்தில்,
கிருத்திகை நட்சத்திரத்துடன் சந்திரன்
கூடியிருக்கும் திருநாள் கார்த்திகைத்
திருவிழாவாக 13 நாட்கள்
திருவண்ணாமலையில
கொண்டாடப்படுகிறது.

``திருவண்ணாமலை தீபம்'' என்று இந்த
விழா சிறப்பித்து கூறப்படுகிறது.

இது இறைவனை ஜோதியாக, சுடராக,
தீபமாக, விளக்காகப் போற்றித் துதிக்கும்
திருவிழா. திருவண்ணாமலையில்,
கார்த்திகைத் திருநாளன்று பஞ்சமூர்த்திகள்
சன்னதிக்கு வெளியில் வந்து நின்றதும்,
அண்ணாமலையில் அகண்டதீபம்
ஏற்றப்படும். மைசூர் சமஸ்தானத்தின்
அமைச்சராக இருந்தவர் வேங்கடபதிராயர்.

அவர் 1745ஆம் ஆண்டு அண்ணாமலை தீபம்
ஏற்றுவதற்காக வெண்கலத்தால்
செய்யப்பட்ட
கொப்பரை ஒன்றை வழங்கினார். இன்றும்
இந்தக் கொப்பரையில்தான்
மலைமீது தீபமேற்றுகிறார்கள். இந்தக்
கொப்பரையில், கிலோக்கணக்கில் நெய்
வார்த்து புதுத்துணியால் திரி செய்து தீபம்
ஏற்றுவார்கள்.

அண்ணாமலை தீபம் சில நாட்கள்
வரை தொடர்ந்து சுடர்விடும். 13 நாட்கள்
கொண்டாடப்படுகிற
கார்த்திகை தீபத்திருவிழா முதல்
மூன்று நாட்கள் துர்க்கை கோவிலிலும்
அடுத்து வரும் பத்து நாட்கள்
அண்ணாமலையார் கோவிலிலும்
நடைபெறும்.

சிவ வடிவமாக விளங்கும் இந்த
மலையை தரிசிப்பதும் வலம் வருவதும்
புனிதமானதாகும். கிரிவலம்
வருவதற்கு எல்லா நாட்களும் ஏற்ற
நாட்களே. எனினும் சித்திரை முதல்
நாளும், சிவராத்திரி தினமும்,
பவுர்ணமி திதியும் உகந்தவையாகும்.


20 May 2015

சித்த மருத்துவம் என்றால் என்ன?

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச்சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில்உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)

சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.

நம் உடலில் காற்றுவெப்பம்நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.

16 May 2015

பிடிவாத குழந்தையா? பிடியுங்கள் டிப்ஸ்..

கு
ழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’

‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டி னார்.

‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக் கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.

‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.

மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடையமுடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.

‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..

‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.


குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்

குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது.அடிக்கவும் கூடாது.பரிதாபப்படவும் கூடாது.அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.

குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்

சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.

3 May 2015

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்! ஆண்கள் அனைவரும் கட்டாயம் படியுங்கள்!


Untitled-1-copy11உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்:-

விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

29 Apr 2015

Pan card

Understand the PAN (Permanent Account Number)

PAN is a 10 digit alpha numeric number, where the first 5 characters are letters, the next 4 numbers and the last one a letter again. These 10 characters can bedivided in five parts as can be seen below. The meaning of each number has been explained further.
1. First three characters are alphabetic series running from AAA to ZZZ
2. Fourth character of PAN represents the status of the PAN holder.
• C — Company
• P — Person
• H — HUF(Hindu Undivided Family)
• F — Firm
• A — Association of Persons (AOP)
• T — AOP (Trust)
• B — Body of Individuals (BOI)
• L — Local Authority
• J — Artificial Juridical Person
• G — Government
3. Fifth character represents first character of the PAN holder’s last name/surname.
4. Next four characters are sequential number running from 0001 to 9999.
5. Last character in the PAN is an alphabetic check digit.
Nowadays, the DOI (Date of Issue) of PAN card is mentioned at the right (vertical) hand side of the photo on the PAN card. .........!!!

Share It

www.fb.com/goyarl

www.fb.com/yarlsupermarket

8 Apr 2015

ஆயுர்வேதம்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
September 2010

 

விபரம் - ஜனனி ஜெயரட்ணராஜர

ஆதி கால மனிதன் இயற்கையோடு கைகோர்த்து வாழ்ந்தான்.ஆரோக்கியமும் இன்பமும் நிறைந்த அவன் வாழ்க்கையில் குறைகள் என்று ஏதும் இருக்கவில்லை. இருந்தால்‚ அதற்கான தீர்வும் இயற்கையிடமிருந்தே அவனுக்குக் கிடைத்தது. இயற்கையை ஆதாரமாகத் தழுவி வாழ்ந்த அக்கால மனிதன்‚ அவனது நோய் நொடிகளுக்கு இயற்கையிடமிருந்தே தீர்வுகளைப் பெற்றுக் கொண்டான். மிகச் சிறந்த மருத்துவமான இயற்கை மருத்துவம் அவ்வாறு தான் உயிர்பெற்றது. மனித உடலில் உருவாகும் நச்சுக்களை வெளியேற்றி‚ உடல் உறுப்புக்களை சுத்தம் செய்து இயற்கை வளங்களின் மூலம் உடலை ஆரோக்கியமாகப் பேணும் மூல மந்திர சாஸ்திரமே இயற்கை மருத்துவமாகும்.

மொழி‚ சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் இன்று உலகில் ஆங்கில மருத்துவம்‚ சித்த மருத்துவம்‚ இயற்கை மருத்துவம் என பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. ஓலைச் சுவடிகளிலும்‚ கல்வெட்டுக்களிலும் பொறிக்கப்பட்டு மகத்தான தன்மைகளைக் கொண்டு கி.மு 4000 ஆண்டு காலத்திலிருந்தே‚ குறிப்பாக இலங்கையிலும்‚ இந்தியாவிலும் பயன்பாட்டில் இருந்து வந்த "வாழ்க்கையின் விஞ்ஞானம்" (Science of Life) ஆயுர்வேதம் ஆகும்.

ஆயுர்வேதத்தின் தோற்றம் அதன் முதல் நூலான "சரக சம்ஹிதை" எனும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. அதில் இத்தத்துவம் உலகில் இருந்துள்ளது என்றும்‚ பிரம்மா பிரஜாபதிக்கும் வைத்தியர்களான அஸ்வினி குமாரர்களுக்கும் கற்றுக் கொடுக்க‚ அவர்கள் அதை இந்திரனுக்கும் கற்றுக் கொடுத்து இவ்வாறு முனிவர்கள்‚ தவசிகள்‚ ஞானிகள் வேதங்களின் ஒரு பகுதியாக ஆயுர்வேதத்தை உருவாக்கினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகையினால்தான் பண்டைய நூல்களான புராணங்கள்‚ உபநிடதங்கள்‚ இராமாயணம்‚ மகாபாரதம்‚ திருக்குறள் மற்றும் சமண - சமய நூல்களிலும் ஆயர்வேதத்தைப் பற்றிய குறிப்புகளை நாம் காணக்கூடியதாக உள்ளது. 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதத்தின் குறிக்கோள்கள் 
1. நோயற்ற தன்மையைப் பேணுவது 
2. உடலிலுள்ள நோய்களை முழுமையாக அகற்றுவது

இந்த உலகை காற்று‚ வெப்பம் (உஷ்ணம்)‚ குளிர்ச்சி (சீதம்) ஆகிய முச்சக்திகளும் இயங்கச் செய்வது போலவே‚ எமது உடலை வாதம்‚ பித்தம்‚ கபம் எனும் தாதுக்கள் இயங்கச் செய்கின்றன. இத் தோஷங்களின் சமநிலை குழம்பும் போதுதான் உடலில் நோய்கள் உருவாகின்றன. 

இதைத்தான் நம் சொல்லின் வல்லனாம் வள்ளுவன்‚ 
"மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் 
வளிமுதலர வெண்ணிய மூன்று" என்று எடுத்துரைத்துள்ளார்.

வாதம்‚ பித்தம்‚ கபம் எனும் மூன்று தோஷங்களும் முறையே காற்று‚ சூரியன்‚ சந்திரன் ஆகியவற்றையே பிரதிபலிக்கின்றன. வாதம் என்றால் வாயு‚ பித்தம் என்றால் பித்தநீர்‚ கபம் என்றால் சளி. இவற்றை மனித உடலில் சமச்சீரான நிலைக்குக் கொண்டு வருவதே ஆயுர்வேத மருத்துவமாகும்.

ஆயுர்வேதத்திலும் இவ் உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்! நிலம்‚ நீர்‚ நெருப்பு‚ காற்று‚ ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களும் மனித உடலில் மூன்று தோஷங்களாகவும்‚ ஏழு தாதுக்களாகவும்‚ மூன்று மலங்களாகவும் வெளிப்படுகின்றன. தோஷங்களுக்கென்று உடலில் தனி உறைவிடம் உண்டு. அவை ஒவ்வொன்றிற்கும் தனித்துவமான குணங்களும் உண்டு. இவை சேர்ந்தும்‚ தனித்தும் அறுபத்து இரண்டு (62) வழிகளில் நோய்களை உண்டாக்கக் கூடியவை.

ஆயுர்வேதத்திலுள்ள மூன்று தோஷங்களும் ரஜோ‚ தமோ‚ சாத்வ குணங்களைக் கொண்டும் பிரிக்கப்படுகின்றன. அதாவது வாதம் "ரஜோ" குணத்தையும்‚ பித்தம் "சாத்வ" குணத்தையும்‚ கபம் "தமோ" குணத்தையும் கொண்டதாகும். இக்குணங்கள் சமநிலையில் உள்ளபோது உடல் ஆரோக்கியமும்‚ ஆளுமை செய்யும் தோஷத்தைப் பொறுத்து உடலின் செயற்பாடுகளும் அமையும். உதாரணமாக கபம் எனும் தோஷம் அதிகரித்தவர்கள் தமோ குணத்தைப் போன்று மந்தத் தன்மை‚ செயலில் பின்னடைவு உள்ளவர்களாக காணப்படுவார்கள்.

ரஜோ‚ தமோ‚ சாத்வ ஆகிய முக்குணங்கள் மட்டுமல்லாது மூன்று தோஷங்களும் ஒருவரின் மன நிலையைப் பாதிக்கும் காரணத்தினாலேயே‚ ஆயுர்வேதத்தில் உடல் சிகிச்சையுடன் மன சிகிச்சையும் வழங்கப்படுகின்றது. ஆகையால்தான்‚ மருந்துகளை உட்கொள்ளும்முன் ஆயுர்வேத வைத்தியரைக் கண்டு‚ தோஷங்களின் பாதிப்பு என்ன என்பதை அறிந்துகொள்வது அவசியமாகும். பெரும்பாலும் ஆயுர் வேத வைத்தியர்கள்‚ ஒருவரின் தோற்றம்‚ நாடித்துடிப்பு‚ நடத்தை ஆகியவற்றைப் பார்த்தும் பரிசோதித்தும் தோஷத்தின் தன்மையைத் தெரிந்து கொள்வர்.

இயற்கையிடமிருந்து தன்னை அந்நியப் படுத்திய மனிதன்‚ மீண்டும் இயற்கையின் வரப்பிரசாதங்களைப் பெற முனையும் போது தடையாய் இருந்தது ஆயுர்வேதம் பற்றிய பழைமையான உள்ளுணர்வு (Ancient Perception). ஆயுர்வேத மருத்துவம் என்றாலே துர்நாற்றமும்‚ எண்ணைகளும்‚ கசப்பான மருந்துகளும் என்றிருந்த நிலையை மாற்றி‚ இன்று அவற்றிலுள்ள இயற்கையான நற்குணங்களைப் பேணுவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாகவே (Pleasant Experience) இக்காலத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. ஆகவேதான்‚ தற்போது‚ இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் ஆயுர்வேத மருத்துவத்திற்கும்‚ ஆயர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கும் கிராக்கி (Demand) அதிகரித்துள்ளது.

சுருங்கக் கூறின்‚ ஆயுர்வேத மருத்துவம் என்பது நூறு சதவீதம் இயற்கையான மூலப்பொருட்களை மட்டுமே உபயோகித்து‚ விலங்குக் கொழுப்பு சில சமயங்களில் சேர்க்கப்பட்டும் பெருமளவில் சேர்க்கப்படாமலும்‚ இயற்கை எண்ணைகளிலிருந்து நறுமணத்தையும்‚ இயற்கையான பதப்படுத்தல்களையும் உபயோகித்து குறிப்பான வரையறைக்குட்பட்ட செயன்முறைகளின்படி தயாரிக்கப்படும் உன்னதமான பொக்கிஷமாகும்.

ஆயுர்வேதப் பொருட்களை தேர்ந்தெடுக்கும்முன்‚ ஒரு ஆயுர்வேத வைத்தியரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டிய தோஷம் எதுவென்று அறிந்து கொள்ள வேண்டும். அதன் பின்‚ வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதியைப் பேணும் நற்பெயர் கொண்ட தரவகையைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.

ஆயுர்வேதப் பொருட்கள் வரிசையில் இன்று- அஸ்வகந்தா‚ கசீரபாலா‚ த்ரிபலா போன்ற சிகிச்சைக்கான வைத்திய எண்ணைகள் ( Treatment Oils). தாமரை மற்றும் மஞ்சள் ( Lotus & Saffron)‚ நீராம்பல் மற்றும் பாதாம் ( Water Lily & Almond)‚ மல்லிகை மற்றும் தேங்காய் ( Jasmine & Coconut) கலவைகளால் ஆன சருமத்தை தூய்மைப்படுத்தும் சவர்க்காரங்கள் ( Cleansing Bars). சருமத்திலுள்ள அடைக்கப்பட்ட நுண்ணிய துளைகள் ( Clogged Pores)‚ இறந்த உயிரணுக்கள் ( Dead Cells) ஆகியவற்றை அகற்றுவதற்காக வேம்பு ( Margosa)‚ வெட்டிவேர் ( Vettiver)‚ சந்தனம் ( Sandalwood) ஆகியவற்றிலான பசை ( Body Scrub). சருமம் ஈரப்பதனை ( Moisture) இளக்காதிருக்க உபயோகிக்கக் கூடிய செந்தாமரை ( Pink Lotus)‚ நீராம்பல் ( Water Lily) மல்லிகை ( Jasmine) போன்றவற்றைக் கொண்டு தயாரித்த உடற் பசை ( Body Lotion / Cream). மன உளைச்சல்‚ பதற்றம்‚ தலைவலி மற்றும் உடற் தசையில் ஏற்படும் வலியைப் போக்கத் தைலம் ( Peace Soothing Balm). களைப்பான‚ வீங்கிய கால்களின் வேதனையைத் தணிப்பதற்கான தைலம் ( Relax Foot Balm). உலர்ந்த‚ வெடித்த‚ மற்றும் களைத்த பாதங்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியைத் தரும் பச்சைப் புதினாப் பசை ( Green Mint Cooling Foot Relief) என மட்டுமல்லாது‚ இயற்கை மூலிகைகள் மற்றும் எண்ணைகளாலான‚ நிம்மதியான உறக்கத்தைத் தூண்டும் திரவியம் (Sleep Therapy - Pillow & Body Mist) என‚ பல்வேறு பொருட்கள் தற்போது இலங்கையில் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

அனைத்து தோஷங்களுக்கும் பொருந்தும் வகையில் சில ஆயுர்வேதப் பொருட்கள் இருப்பினும்‚ தனக்கான தோஷத்தைக் கண்டறிந்து‚ அதற்கேற்ற சிகிச்சையை ஆயர்வேத சித்தாந்தத்தின்படி பின்பற்றி‚ ஆயிரம் பொன்னிலும் மேலான ஆயுளை நீடித்து‚ நோய் நொடியில்லாமல் நலமாய் வாழ்வோம்!

- See more at: http://www.serendib.btoptions.lk/tamilshow.php?issue=9&id=197#sthash.a26VHRzb.dpuf

கர்ப்பப்பை கட்டிகள்

கர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....


Picture of uterine fibroidsகர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix)


 - உடல்பகுதி


 - கருக்குழல்


 - கருப்பை


 எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்ச்சி ஏற்படலாம்.


 * கர்ப்பப்பை கட்டி - பினைன் (Benign Tumor) (ஆபத்தில்லாத கட்டி)


 - மாலிக்னன் (Malignant Tumor)  (புற்று நோய் கட்டி)


Myomata


 * ஆபத்தில்லாத கட்டி


 * கர்ப்பப்பை தசைப்பகுதியில் இருந்து வளரும் கட்டி தசையில் இருந்து எழுந்த வளர்ச்சி நர் மயோமேட்டா (அல்லது) மயோமா


 * இதை ஸ்க்லிரோமேட்டா, பைப்ராய்ட் என சொல்லாம்.


யார் யாருக்கு வர வாய்ப்புள்ளது?


 * மாதவிலக்கு நின்ற பெண்களில் 60% பெண்களுக்கு காணப்படுகிறது.


 * மணமாகி குழந்தையில்லாத பெண்கள் ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்த தாய். இவர்களில் 60% பெண்கள் வர வாய்ப்பு


 * சதை வளர்ச்சி 1 செ.மீ - 15 செ.மீ. அளவு இருக்கும்.


 * 30% பெண்கள் பாதிப்பு - 30 வயது - 40 வயது


 * 60% பெண்கள் பாதிப்பு - 40 வயது - 50 வயது


 * 30% பெண்கள் பாதிப்பு - பிள்ளையில்லாத பெண்கள்


 * 20% பெண்கள் பாதிப்பு - ஒரு குழந்தை பெற்ற பெண்கள்


 * 40% பெண்கள் பாதிப்பு - பல குழந்தைகள் பெற்ற பெண்கள்


 * 10% பெண்கள் பாதிப்பு - முதர் கன்னிப்பெண்கள்


 * 20 வயதுக்கு கீழ் உள்ள பெண்களிடம் Fibroids தோன்றுவதில்லை.


Except in Afro-Caribbean பெண்களிடம் 20 வயது கீழ் teenageல் தோன்றுகிறது.


(Fibroids) கர்ப்பப்பை கட்டிகளில் 4 வகைகள்


Submucus Fibroids :


 கர்ப்பப்பையின் உள்ளே கரு எங்கே வளருமோ அங்கு வளரும். எண்டோ மெட்டிரியம் அடுக்கினால் இந்த Fibroids மூடப்பட்டிருக்கும்.


Intramural Fibroids


 * கர்ப்பப்பையின் சுவர் பகுதியில் வளரும் கட்டிகள்.


 * கர்ப்பப்பையின் இருபக்கங்களிலும் தோன்றக்கூடியது.


 * 5 செ.மீ. மேல் கட்டி வளர்ந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.


 Subserous Fibroids


 * கர்ப்பப்பையின் வெளிப்பாகத்தில் தோன்றக்கூடியது


 * சில மயோமேட்டாக்கள் காம்பு போன்ற பகுதியால் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும்.


 * கர்ப்பப்பை வெளிபகுதியில் தோன்றுவதால் குழந்தை பிறப்பதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது.


Fundal Myoma


 * கர்ப்பப்பையின் மேல், நடுப்பகுதிகளில் கட்டிகள் வருவது. இம்மாதிரி கட்டிகள் வருவது மிகவும் அரிது.


 * சில மயோமா ப்ராட்லிகமெண்டுடன் இணைந்திருக்கும் ப்ராட்லிகமெண்ட்


 * Penduculated Fibrods can be attached either to the inside or outside wall of the womb and they are characterize by a stalk


* Cervical Myoma


 மிக மிக ஆபூர்வமாக தோன்றுவது 4% காணப்படும்


Intramural Fibroids - 73%


Submucons - 16.6%


Subserous - 10.4%


கட்டிகள் உள், வெளிப்புற தோற்றம்


 * வட்ட வடிவம் (அல்லது) முட்டை வடிவம்


 * கேப்சியூல் போன்ற உறை. தொட்டால் ரப்பரி மாதிரி இருக்கும்


 * கேப்சியூல் உள்ள இணைப்புத்தி மயோமாவை கர்ப்பப்பை சுவருடன் இணைகிறது.


 * கேப்சியூல் - விசிறி போன்ற அமைப்பானது ரத்தக்குழாய் இதன் மூலம் ரத்தம் பெற்று மயோமா கட்டிகள் வளர்கிறது.


 * கட்டியின் ஒரங்களில் ரத்தஒட்டம் மிகுதி. அங்கு கால்சியம் அடைப்பட்டு கல்  மாதிரி தோன்றும்.


 * கட்டியின் நடுப்பகுதிக்கு மிக குறைந்த ரத்தம் தான் செல்லும்


 * கட்டியின் நடுப்பகுதியில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்ந்து இறுகி விடும்.


Myomaவின் அறிகுறிகள்


 * முக்கிய குறி அதிக மாதப்போக்கு ஏற்படுதல்


 * கர்ப்பப்பையின் உள்ளே (அல்லது) கர்ப்பப்கையின் இருபக்கங்களிலும் வருவது மாதப்போக்கில் தன்மை ஒழுங்கற்று இருக்கும்.


 * மாதப்போக்கு விட்டு விட்டு (அல்லது) ஒழுங்கற்று (அல்லது) அதிகமாக வெளிப்படலாம். கட்டிகளாகவும் வெளிப்படலாம்.


 * கட்டியின் அளவு பெரியதாக இருப்பின் கர்ப்பப்பை கட்டி சிறுநீர்ப்பை (அல்லது) மலக்குடல் அழுத்துவதால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படும். முதுகுவலி ஏற்படலாம்.


 * பெரும்பாலான பெண்களுக்கு மயோமாவால் அதிக மாதப்போக்கு ஏற்படுகிறது. வலி அவ்வளவாக இல்லை.


 * சில பெண்களுக்கு அடிவயிறு கனத்து இருக்கும் இருக்கும் உணர்வு தோன்றுதல்


 * சில பெண்களுக்கு அதிக போக்கின் காரணமாக இரத்த சோகை தோன்றலாம்.


 * தொடர்ந்து இருபது நாட்களுக்குள் அதிக மாதப்போக்கு அல்லது ஐந்து நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் மாதப்போக்கு ஏற்படலாம்.


 * பல கேசுகளில் கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறியே வெளிப்படாது.


 * 25 - 30 வயதில் தோன்றும் Myoma கர்ப்பம் தரிப்பதை தடுக்கிறது.


 * கர்ப்பம் தரித்த பின் ஏற்பட்டால் Myoma கருச்சிதைவு ஏற்படலாம்.


 * பெரிய கட்டிகள் அழுத்தம் இரத்தக் குழாய்களைத் தாக்குவதால் இடுப்புக்குழியில்


 வீக்கம், வலி ஏற்படும்.


 * மாதப்போக்கு முற்றும் பெறும் காலம் மற்றும் முற்றும் பெற்றபின் சில கர்ப்பப்பை கட்டிகள் சுருங்கி விடும்.


Myoma ஏற்படக் காரணம்


 * திட்டவட்டமான காரணம் அறியப்படவில்லை. பரவலான காரணம்


 * நாடப்பட்ட கர்ப்பப்பை தொற்று


 * குழந்தையின்மை


 * ஒரு குழந்தை மட்டும் பெற்ற பெண்கள்


 * நாற்பது வயது வரை உள்ள கன்னிப்பெண்கள்


Homoeo Medicine


 1. வயதானவர்கள் – Ars. Iod


 2. இளம் வயதுபெண்கள் - Aurmur


 3. அடிவயிறுகனம் எடை தொங்குவது போன்ற உணர்வு + திடீர் வலி - Calendula


 4. குழந்தை பிறந்தவுடன் கட்டி தோன்றி வலியுடன் கூடிய M + வயிறு கனம் – Fraxinus Americans


 5. தைராய்ட் சுரப்பி அதிக வளர்ச்சி – Cal.யோத்


நன்றி : கீற்று.காம்

கர்ப்பப்பையில் கட்டி  
                                             பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டி ஏற்படுவது மிகவும் சதாரணமான ஒன்றே. குழந்தையை கர்ப்பபையில் சுமக்கும் காலத்தில் யூட்டரின் பைபராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் இவ்வகை கட்டிகள் தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் பொதுவாக புற்று நோய்க் கட்டிகளாக மாறும் என்று கருதப்படுவதில்லை.

பல நேரங்களில் இந்த கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றே மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நான்கில் மூன்று பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படலாம். ஆனால் இவை பொதுவாக எந்த அறிகுறிகளையும் காண்பிக்காது என்பதால் பலருக்கு இது இருப்பதே தெரியவராது. இடுப்பெலும்புச் சோதனையில் உங்கள் மருத்துவர் இதன் இருப்பை எதேச்சையாக கண்டுபிடிக்கும் தருணங்கள் உண்டு.

பெண்களுக்கு பொதுவாக கருப்பை கட்டிகள் 30 அல்லது 40 வயதிலேயே தோன்றுகின்றன. கருப்பை கட்டிகள் திடீரென இடுப்பு வலியை தோற்றுவிக்குமேயானால் அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும். இது பொதுவாக ஆபத்தை விளைவிக்காது என்றாலும் வலியை ஏற்படுத்தலாம் என்பதால் அறுவை சிகிச்சை மூலம் இதை அகற்றுவது வழக்கம்.

அறிகுறிகள்:

கருப்பையில் கட்டி இருக்கும் போது பொதுவாக கீழ்வரும் அறிகுறிகளை கவனிக்க வேண்டும். மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக காணப்படும். மாத விடாய் நாட்கள் அதிகமாதல் அல்லது மாதவிடாய்களுக்கு இடையில் உதிரப் போக்கு ஏற்படுவது. இடுப்புப் பகுதியில் வலி அல்லது அழுத்தம், சிறுநீர் அடிக்கடி கழித்தல் அல்லது சிறுநீர் சேருதல், மலச்சிக்கல், முதுகு வலி அல்லது கால்வலி.

தனக்கு வரும் ரத்த அளவைவிட கட்டி அதிக வளர்ச்சியடைந்திருந்தால் கட்டி அரிதாக வலியை ஏற்படுத்தலாம், ஊட்டசத்து இல்லாமல் கட்டி பொதுவாக கரைந்து விடுவது இயல்பு. இது போன்று அழியும் கட்டியிலிருந்து வெளிவரும் துணைப் பொருட்கள் சுற்றியுள்ள தசைகளில் ஊடுருவி வலியையும் காய்ச்சலையும் ஏற்படுத்தலாம்.

கருப்பையின் உள்துவாரத்தில் வளரும் கட்டி அல்லது சதை தான் நீண்ட நாள் மற்றும் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை ஏற்படுத்துகிறது என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கருப்பையின் புறப்பகுதியில் நீட்டி கொண்டிருக்கும் கட்டி பிளாடரையோ சிறு நீரை அகற்றும் குழாயையோ அழுத்தும், இதனால் சிறுநீர்ப்பாதை உபாதைகள் ஏற்படலாம்.

கருப்பையின் பின் பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தும். இதனால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இது முதுகு தண்டு நரம்புகளை அழுத்தும் போது முதுகுவலி ஏற்படுகிறது.

காரணங்கள்:

மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டி தோன்றுகின்றன. ஒரே ஒரு செல் திரும்பத் திரும்ப மறு உற்பத்தியாகி கட்டியை தோன்றச் செய்கிறது. கட்டிகள் கண்களுக்கு தெரியாத அளவு முதல் கருப்பையையே பெரிதாக்கும் அளவு வரை வேறுபட்ட அளவுகளில் தோன்றலாம். இவை ஏன் தோன்றுகின்றன என்பது குறித்து தெரியாது. ஆனால் கிளினிக்கல் அனுபவமும், ஆராய்ச்சியும் பல காரணிகளை எடுத்துரைக்கின்றன.

மரபணு மாற்றத்தால் ஏற்படும்:

மரபணுக் கூறுகளின் மாற்றங்களால் இது ஏற்படலாம். கருத்தோற்றத்தை சாத்தியமாக்கும் எஸ்ட்ரோஜென், ப்ரொகெஸ்ட ரோன் என்ற இரண்டு மறு உற்பத்தி ஹார்மோன்கள் கட்டியை தோற்றுவிக்கலாம் என்று ஒரு சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் திசுக்களை பராமரிக்கும் சில பொருட்கள் அதாவது இன்சுலின் போன்ற வளர்ச்சிக் காரணி கட்டி வளர்ச்சிக்கு காரணமாகலாம்.

கருப்பை கட்டி சிகிச்சையில் ஒரே அணுகுமுறை என்பது இல்லை. பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன. கட்டிகள் இருப்பது தெரியவராத பட்சத்தில் பொறுத்திருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த கட்டிகள் நிச்சயமாக புற்று நோய் கட்டிகள் அல்ல. மேலும் மகப்பேற்றில் இது ஒரு போதும் இடையூறு செய்யப் போவதில்லை.

இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கி விடும். இது தவிரவும் பல விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க ஆபத்துகளை உருவாக்கலாம் என்பதால் மருத்துவர்கள் வேறு வழியே இல்லாத பட்சத்தில் தான் இதற்கு பரிந்துரை செய்வார்கள்.

அல்லது கட்டிகளை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சையும் உள்ளது. இதுவல்லாமல் மயோலைஸிஸ் என்று அழைக்கப்படும் சிகிச்சை முறை உள்ளது. இதில் மின்சாரத்தை பாய்ச்சி கட்டிகளை அழித்து, கட்டிகளை ஊட்டி வளர்க்கும் ரத்தக் குழாய்களை சுருங்க வைக்கும் சிகிச்சை உதவிகளுமாக இருக்கும் என்கிறார் சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி.  

பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளை நீக்க நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமாகியுள்ளன. உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை முறையில், கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணிய கேமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது. இதனால் கருப்பை குழாயில் இருந்த அடைப்பு முற்றிலும் நீக்கப்படுவதால் கர்ப்பம் சாத்தியமாகிறது. இந்த சிகிச்சை எடுத்து கொண்ட பின்னர் 60 முதல் 70 சதவீதம் வரையிலான பெண்கள் கருத்தரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

நவீன சிகிச்சைகள்:

பெண்களுக்கு சுரப்பியில் கோளாறு, சினைப்பையில் நீர்க்கட்டிகள், ரத்தக் கட்டிகள், குழாயில் அடைப்பு, அல்லது நீர் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். இதை தவிர கர்ப்பப்பையில் கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி இருக்கலாம்.

விஞ்ஞான வளர்ச்சியினால் இவை அனைத்தும் சரி செய்யலாம். ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் பெரும்பாலும் இப்பிரச்சினைகளை 99 சதவீதம் சீராக்கலாம். எல்லா குறைபாடுகளுக்கும் சோதனைக் குழாய் சிகிச்சை அவசியம் என்று சொல்ல முடியாது. 90 சதவீதம் குறைபாடுகளை லேப்ரோஸ் கோபி, ஹிஸ்டரோஸ்கோபி சிகிச்சையினால் சரி செய்ய முடியும்.

இந்த சிகிச்சை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்கிறார் டாக்டர் ஜெயராணி.

தாய்மை அடையலாம்:

முட்டைப் பையில் உள்ள கட்டிகள், கர்ப்பப்பையில் 10 செ.மீ. கட்டிகள் என்பனவற்றை ஒரு செ.மீட்டர் அளவேயான சிறு துளையிட்டு நீக்கலாம். ஹார்மோனிக் ஸ்கேஸ்பெல், மோர் சிலேட்டர் என்ற அதிநவீன கருவிகளால் சிறிய அளவு ரத்தப் போக்கோடு சிறு துளையையிட்டும் அகற்றலாம்.

தையலே இல்லாமல் ஒரே நாளில் தெம்போடு வலியில்லாமலும் வீட்டிற்குச் செல்லலாம். இரண்டே நாளில் வேலைக்கும் செல்லலாம். டியூப்பில் உள்ள நீர் அடைப்பு இவை இரண்டும் குழந்தை உருவாவதைத் தடுக்கும். இவற்றை இந்த மகத்தான சிறு துளை சிகிச்சையினால் சரி செய்யலாம்.

சரி செய்த பிறகு 90 சதவீதம் பெண்கள் தாய்மை அடைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை தவிர கர்ப்பப்பையில் சதை வளர்ச்சி இருப்பதால் குழந்தை வளர இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஹிஸ்ட்ரோஸ்கோபி சிகிச்சையினால் இதையும் நீக்கலாம். கட்டிகளையும் நீக்கலாம், நீக்கிய பின் 95 சதவீதம் பெண்களுக்கு தாய்மை அடையும் வாய்ப்பு உண்டாகிறது.


நன்றி : மாலைமலர் நாளிதழ் ..

கர்ப்பப் பை கட்டியை அகற்ற நவீன சிகிச்சை.. 
                                                                                                    கர்ப்பப் பை கட்டியை அகற்ற சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்"ஹைபு' என்ற நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது என புற்றுநோய் நிபுணர் டாக்டர்ரத்னாதேவி தெரிவித்தார்.நெய்வேலியில் செயல்படும் சென்னை அப்பல்லோ
மருத்துவமனையின் தகவல் மையத்தில் நேற்று எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர்ஜெயமூர்த்தி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரத்னாதேவி மற்றும்அப்பல்லோ அதிகாரிகள் லதா மகேஸ்வரி, லட்சுமி பிரியா ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.அப்போது டாக்டர் ரத்னாதேவி கூறியதாவது:கர்ப்பப்பை கட்டிஎன்பது குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களிடம் பொதுவாக காணப்படுகிறது.


இக் கட்டிகளை அகற்ற வழக்கமாக அடி வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை
அல்லது நுண் துளை லேப்ராஸ்கோப் மூலம் சிகிச்சை ளிக்கப்படும்.இம்முறை
சிகிச்சை தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் 'ஹைபு' என்ற புதிய அதிநவீனசிகிச்சை வாயிலாக, துளையில்லாமல், மயக்க மருந்து இல்லாமல் 2 மணிநேரத்திற்குள் சிகிச்சை அளித்து கட்டியை முழுமையாக அகற்றி குணப்படுத்தமுடியும்.ரேடியேஷன், தழும்பு எதுவுமின்றி உடனடியாக வீட்டிற்குத்திரும்பலாம்.இவ்வாறு டாக்டர் ரத்னாதேவி கூறினார்.எலும்பு சிகிச்சை நிபுணர்டாக்டர் ஜெயமூர்த்தி கூறுகையில், "இளம் பருவத்தினர் தொடர்ந்துகம்ப்யூட்டர் மற்றும் "டிவி' பார்ப்பதால் கழுத்து, முதுகுவலி போன்ற எலும்புதொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.ஓய்வின்றி உட்கார்ந்த நிலையிலேயே நீண்டநேரம் பணி செய்வது. சூரிய வெளிச்சமே உடலில் படாமல் அறைக்குள்ளேயே செய்யும்பணிகள் மேற்கொள்வதை இளம் பருவத்தினர் தவிர்க்க வேண்டும்' என்றார்.


நன்றி:தமிழ் யாஹூ.காம் 


கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்!
பொதுவாக ஹோமியோபதி மருத்துவமுறையில் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்தமுறை மருந்துகளால் தீங்கு ஏற்படுவதில்லை. இந்த மருந்துகள் பக்க விளைவுகளையோ அல்லது பின் விளைவுகளையோ ஏற்படுத்துவதில்லை என்பதும் ஒவ்வாமையை உண்டாக்குவதில்லை என்பதும் இந்த மருத்துவ முறையின் கூடுதல் தனிச்சிறப்பு எனலாம்.


கர்ப்பிணிப் பெண்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஹோமியோபதி மருந்துகள் முழுப் பாதுகாப்பானவை. மருந்துகளை உட்கொள்ளும் முறை மிகவும் எளிமையானது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இனிமையான சுவையுடன் இம்மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


எல்லாவகையான நோய்களுக்கும் நிரந்தர குணம் அளிக்கும் வகையில் ஹோமியோபதி மருந்துகள் உள்ளன. அந்த வகையில் கர்ப்பப்பை கட்டிகளைக் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம் பற்றிப் பார்ப்போம்.


இன்றைய நவீனயுகத்தில் படித்த பெண்களும், அனுபவம் மிக்க நடுத்தர வயதுப் பெண்களும் மாதவிலக்குக் கோளாறுகள் (Menstrual Disorders), கர்ப்பப்பை கோளாறுகள் (Uterine Problems), பாலியல் பிரச்னைகளுக்கு (Sexual Disorders) முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் சில பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை அந்தரங்கமாகக் கருதி சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள். வெளியே சொல்வதற்கு சங்கடப்படுகிறார்கள். இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடுகிறது.


Menorrhagia எனப்படும் அதிகளவு மாதப்போக்கு, Metrorhagia எனப்படும் இடைக்கால மாதப்போக்கு, Dysmenorrhea எனப்படும் வலிமிக்க மாதப்போக்கு, Amenorrhea எனப்படும் தடைப்படும் மாதப்போக்கு, Leucorrhea எனப்படும் வெள்ளைப்பாடு, Oophoritis, Salpingitis, Metritis போன்ற கர்ப்பப்பை சார்ந்த அழற்சிகள், Cysts எனப்படும் நீர்க்கட்டிகள் Uterine Fibroids எனப்படும் கர்ப்பப்பை நார்க்கட்டிகள், Cervical Polyp, Uterine, Tumours, Myoma எனப்படும் சிறிய, பெரிய தசைக்கட்டிகள், வீக்கம் போன்றவை பரவலாகப் பெண்களிடம் காணப்படும் வியாதிகளில் ஒன்றாக உள்ளது. இதுவே கர்ப்பப்பை கட்டிகள் எனப்படுகின்றன.


பேரிக்காய் வடிவத்தில் அமைந்துள்ள கர்ப்பப்பை கூபக எலும்பானது (Pelvis) அதன் நடுவில் பாதுகாப்பாக உள்ளது. பெண்களைத் தாய்மையடையச் செய்யவும், இனப்பெருக்கத்திற்கும் கர்ப்பப்பை அவசியமானதாகும். கர்ப்பப்பையின் ஆரோக்கியமே ஒரு பெண்ணின் முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது.


எனவே கர்ப்பப்பை தொடர்பான கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவற்றுக்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண நிலையில் நோய் இருக்கும்போது அலட்சியப்படுத்தி விட்டால் அந்நோய் முற்றிய நிலையில் வேதனை அதிகரித்து உடல் பலவீனப்பட நேரிடலாம். நோய் முற்றிப்போனால் எந்த மருத்துவ முறையானாலும் குணப்படுத்துவது சிரமம்.


காரணங்கள்


இன்றைய நவீன வாழ்க்கைச் சூழ்நிலைகளாலும், பதற்றம், பரபரப்பு, அவசரங்களாலும், உரங்கள், பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றாலும், உணவுப் பழக்க வழக்கங்களாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமையாலும் கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாகக் கூட இருக்கலாம். 


அதிலும் கடந்த தலைமுறையினரைக் காட்டிலும் இந்த தலைமுறையினரில் குறைவான வயதுடைய பெண்களுக்கு இதுபோன்ற கட்டிகள் அதிகளவில் காணப்படுகின்றன.


கர்ப்பப்பை கட்டிகளைப் பொருத்தவரை அலோபதி மருத்துவமுறையில் மருந்து, மாத்திரைகள் மூலம் குணமாக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை (Hysterectomy) மூலம் அகற்றப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க் கட்டிகள் தவிர மற்ற அனைத்து வகைக் கட்டிகளையும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே குணப்படுத்த முடியும். ஹோமியோபதி மருந்துகள் இதுபோன்ற கட்டிகள் மீண்டும் உருவாகாமல் தடுப்பதுடன் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தும், கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியும் கர்ப்பப்பை இயக்கத்தை இயல்பான நிலைக்குக் கொண்டு வருகின்றன.


சினைப்பைகளிலோ (Ovaries), கருக்குழாய்களிலோ (Fallopian Tubes) கர்ப்பப்பையிலோ (Uterus) வீக்கம் (Enlargement) அல்லது கட்டிகள் இருந்தால் அதனால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். மாதவிலக்கு தடைபடுதல் (Suppression of Menses), கட்டுக்கடங்காத அதீத இரத்தப்போக்கு (Profuse Bleeding) இடுப்பு வலி, அடிமுதுகுவலி, அடி வயிற்றுவலி, கால்களில் வலி, நடக்க இயலாத பலவீனம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பிறப்புறுப்பில் உஷ்ணம், வலி, அதிக வெள்ளைப்பாடு, குளிர்ச்சுரம், தலைவலி, இரைப்பைக் கோளாறுகள், உடலிலும் மனதிலும் அமைதியற்ற நிலை (Restlessness) போன்ற பிரச்னைகளால் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை துயரமாகி விடும்.


மிகவும் குறைந்த வயதுடைய பெண்களின் சினைப்பையில் நீர்மக்கட்டிகள் இருப்பது தெரிய வந்தால் அலோபதி மருத்துவத்தை விட ஹோமியோபதி மருந்துகளே சிறந்த பலனைத் தரும். சினைப்பையில் நீர்மக் கட்டிகளுக்கு அலோபதி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டும் எவ்விதப் பயனும் இல்லாத நிலையில் ஹோமியோபதி மருந்துகள் நல்ல முன்னேற்றத்தை அளித்ததற்கான முன்உதாரணங்கள் ஏராளமாக உள்ளன.


சிகிச்சை முறைகள்


ஹோமியோபதி மருத்துவத்தில் விபத்து காலங்கள் தவிர பெரும்பாலான வியாதிகளுக்கு அறுவைசிகிச்சை தேவையில்லை.


கர்ப்பப்பை வீக்கத்தை, வலி அல்லது கட்டிகளைக் குணப்படுத்த கோனியம், ஆரம்மெட், கார்போ அனிமாலிஸ், கியோசோட்டம், தைராய்டின், அபிஸ்மெல், லாச்சஸிஸ், கல்கேரியா கார்ப், காலிபுரோம், மூரக்ஸ் போன்ற ஏராளமான மருந்துகள் நோயின் தன்மைக்கேற்ப உள்ளன.


மேலும் லக்கானினம், தூஜா, கல்கேரியா புளோர், சிமிசிபியூகா போன்ற மருந்துகளும் கர்ப்பப்பை கட்டி உள்ளவர்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. 


இயற்கையான வழிமுறைகளில் மனித உடலுக்கும் உள்ளத்திற்கும் எந்த இழப்புமின்றி நோய்களைக் குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவமே மிகவும் சிறந்தது.


-நன்றி: ஹோமியோபதியும், மனித நலமும்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

7 Apr 2015

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதிக்கு ஆயுர்வேத மருத்துவம்


சர்க்கரை நோய்க்கு ஆயுர்வேத மருத்துவம்
சர்க்கரை வியாதிக்கு ஆயுர்வேத மருத்துவம்

 சர்க்கரை வியாதி நோய் எய்ட்ஸைக்காட்டிலும் கொடுமையானது என்று பலநிபுணர்கள் கூறுகின்றனர். அது ஒருநோயல்ல. நோய்களின் ஊற்று.உலகமெங்கும் பரவி வரும் நோயாகசர்க்கரை வியாதி  (நீரிழிவு) உருவெடுத்துவருகிறது. 2015 க்குள், புற்றுநோய், இதயநோய்களை விட, மனிதர்களின் இறப்புக்குநீரிழிவு நோய்தான் முதல் காரணமாகப்போகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு,நோயில்லாதவர்களை விட இருமடங்குஅதிகம். இந்தியா போன்ற வளரும்நாடுகளில், வருங்காலங்களில் சர்க்கரைவியாதி நோய் 170 சதவிகிதம் அதிகரிக்கும்.நோயில்லாதவர்களை விட, நீரிழிவு நோய்உள்ளவர்களின் ஆயுட்காலம் 4லிருந்து8வருடங்கள் குறைந்து விடும். இவை வெறும்பயமுறுத்தல்கள் அல்ல. நிதரிசனமானஉண்மை. எனவே இதை சமாளிக்க,விழிப்புணர்வு அவசிய தேவை. வருமுன்காக்கும் வழிகளும், வந்த பின் காக்கும்முறைகளும் மக்களுக்கு போதிக்கப் படவேண்டும்.

நீரிழிவு என்றால் என்ன?

                வண்டிகளுக்கு பெட்ரோல்தேவை. அதே போல் உடலுக்கு எரிசக்திதேவை. இந்த எரிசக்தி - க்ளூக்கோஸ். நாம்உண்ணும் கார்போ-ஹைடிரேட் உணவுகள்க்ளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.இவைகளை ரத்தத்தின் வழியாக உடல்செல்களுக்கு கொண்டு போக வேண்டும்.ஆனால் செல்கள் ரத்தத்திலிருந்துக்ளுகோஸை நேரடியாக எடுத்துகொள்ளாது. செல்லின் பாதுகாப்பு 'பூட்டை'திறக்க சாவியாக கணையம் சுரக்கும்இன்சுலீன் ஹார்மோன் தேவை. இந்தஇன்சுலீன் உற்பத்தி குறைந்தால் அல்லதுசெல்கள் இன்சுலீனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் க்ளுகோஸ்ரத்தத்திலேயே தேங்கி விடுகிறது. ஒரு பக்கம்எரிபொருள் குளுக்கோஸ் கிடைக்காததால்உடல் நலிந்து போகும். இன்னொரு பக்கம்ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிபலப்பிரச்சனைகளை உண்டாக்கும். இதுதான் சர்க்கரை வியாதி.

சர்க்கரை வியாதியின் காரணங்கள்

                இது தான் நீரிழிவுக்கு காரணம்என்று அறுதியிட்டு சொல்லமுடியாததால்தான் சர்க்கரை வியாதி நோயை பூரணமாககுணப்படுத்த முடியவில்லை. பாரம்பரீயம்,சுற்றுப்புற மாசுபடிந்த சூழ்நிலை,போஷாக்கில்லாமல் போனால்,உழைப்பில்லா வாழ்வு, தவறான உணவுமுறை, அதிக உடல் பருமன், சில மருந்துகள்போன்ற பல காரணங்களை கூறலாம்.

சர்க்கரை வியாதியின் வகைகள்

 பல விதமாக பிரிக்கப்பட்டாலும், நீரிழிவுநோயின் இரண்டு முக்கிய பிரிவுகள்
சர்க்கரை வியாதிக்கு ஆயுர்வேத மருத்துவம்
              
•      டைப் - 1 சர்க்கரை வியாதி (நீரிழிவு) -இது தான் தீவிரமான நீரிழிவு வியாதி மொத்தநோயாளிகளில் 10% டைப் 1 நீரிழிவால்பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரிவினர் தினசரிஇன்சுலீனை ஊசிமூலம் உடலில் செலுத்திக்கொள்ளப்படும்.
•    டைப் - 2 சர்க்கரை வியாதி (நீரிழிவு) -இன்சுலீன் ஊசி தேவைப்படாமல்மருந்துகளால் கட்டுப்படுத்திக் கொள்ளும்நிலை.
                இதைத் தவிர கர்ப்பகால நீரிழிவுஎன்ற பிரிவும் உண்டு. இது கர்ப்பிணிபெண்களுக்கு ஏற்படும். குழந்தைபிறந்தவுடன் மறைந்து விடும்.

சர்க்கரை வியாதி  பரிசோதனைகள்

                இரவு பட்டினிக்கு பிறகுகாலையில் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த ரத்த சர்க்கரைஅளவு 125 மி.கி. அளவை தாண்டக்கூடாது.இரண்டு தடவை இந்த பரிசோதனையைசெய்து கொள்ள வேண்டும்.
                பிறகு 75 கிராம் குளுக்கோஸைஉட்கொண்டு, ரத்தத்தை பரிசோதிக்கவேண்டும். இந்த நிலையில், சர்க்கரை அளவு200 மி.கி. அளவுக்குள் இருக்க வேண்டும்.

சர்க்கரை வியாதி அறிகுறிகள் 

• அபரிதமாக சிறுநீர் போதல்
• அடங்காத தாகம்
• தீராத பசி
• தீடிரென்று எடை குறைதல்
• பலவீனம், சோர்வு
 கண் பார்வை மங்குதல்

வாழ்க்கை முறை மாற்றம்

                முதல் கட்ட சிகிச்சை -வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.உணவு கட்டுப்பாடுகள், சத்துள்ள ஆகாரம்ஆகியவையாகும். உடல் பருமன்உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி அவசியம். யோகா, ஆசனங்கள்இவற்றை செய்ய வேண்டும். 'ஸ்ட்ரெஸ்ஸை' (Stress) தவிர்க்க வேண்டும். தினசரி 30நிமிடம் நடந்தாலே போதும். புகைப்பது, மதுபானம் இவற்றை கைவிடவும்.

உணவு முறை

                காய்கறி நிறைந்த உணவு, பாதாம்போன்ற பருப்புகள், பீன்ஸ், நடுத்தர அளவில்பழங்கள், தானியங்கள் இவை நீரிழிவுநோயாளிகளுக்கு ஏற்ற உணவு.நோயாளிகளுக்கு தகுந்த உணவை டாக்டரேசொல்லுவார். முக்கியமானது - இனிப்புகள்கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுபயனளிக்கும்.

                மேற்கண்டவை தவிர நீரிழிவுநோயாளிகள் அடிக்கடி இரத்த சர்க்கரைஅளவை சோதனை செய்து கொள்ளவேண்டும்.

ஆயுர்வேதமும் சர்க்கரை வியாதியும்

 நீரிழிவு நோய் கி.மு. 1500 வருடங்களுக்குமுன்பே, ஆயுர்வேதம் அறிந்த நோய்.பிரேமஹா என்ற பெயரில் 20 வகைகள்சரகசம்ஹிதையில்விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதில்'மதுமேகம்' என்பது நீரிழிவு நோயைகுறிக்கும். நீரிழிவின் காரணங்கள்,அறிகுறிகள், தவிர நீரிழிவு வியாதியல்ல,வளர்சிதை மாற்றக் கோளாறு (Metabolic Disorder) என்றவை 3500 வருடங்களுக்குமுன்பே நமது ஆயுர்வேத மருத்துவர்களுக்குதெரிந்திருந்தது. இந்த உண்மை அலோபதிவைத்தியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. சரக சம்ஹிதையில் மதுமேகத்தின் காரணங்கள், அறிகுறிகள்,சிகிச்சைமுறை விவரமாககொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தவிவரங்கள், தற்போது தெரிந்திருக்கும்விவரங்களுக்கு ஈடானது. எனவே நம்ஆயுர்வேத நிபுணர்களை பற்றி நாம் பெருமைஅடையலாம்.

சர்க்கரை வியாதிக்கு ஆயுர்வேத மருத்துவம்
                ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பு- பாதுகாப்பான மூலிகை மருந்துகளைகொடுப்பது மட்டுமில்லாமல் சரியானஉணவுகளையும் பரிந்துரைப்பது. ஏன்,சுஸ்ருதர் நீரிழிவு நோயாளிகள் கிணறுவெட்டுவது போன்ற உடல் உழைப்பைமேற்கொள்ள வேண்டும். தினமும் 4 மைல்நடக்க வேண்டும் என்றிருக்கிறார்! உடல்எடையை குறைக்க வேண்டும் என்பதையும்ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

                ஆயுர்வேதம் பரிந்துரைக்கும்சிறந்த மூலிகைகள் பல கொடுக்கப்படுகிறது.பயனுள்ள மூலிகள் - இவை பக்க விளைவுகள்உண்டாக்காத மூலிகைகள். இந்த மூலிகைமருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது,உங்களின் வழக்கமான அலோபதிமருந்துகளை நிறுத்தக் கூடாது. முக்கியமாகஇன்சுலீன் உபயோகிப்பவர்கள், இன்சுலீனைநிறுத்தவே கூடாது.

நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் ஆயுர்வேத மூலிகை மருந்துகளையும் சேர்த்துஎடுத்துக்கொள்ள வேண்டும், ஓரிருமாதங்களுக்குப் பின்னர் சர்க்கரை அளவைப்பரிசோதித்து, சர்க்கரை அளவுகுறைந்திருந்தால் மட்டுமே மருத்துவரின்ஆலோசனையுடன், ஆங்கில மருந்தின்அளவைக் குறைத்து எடுத்துக் கொள்ளலாம்.சர்க்கரை அளவு குறையவில்லையெனில்,வருடத்திற்கு ஒரு முறை 2 அல்லது 3மாதங்கள் ஆயுர்வேத மூலிகை மருந்துகளைஎடுத்துக் கொண்டால் கணையம்வலுப்பெறும், சர்க்கரை வியாதியால் அல்லதுஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகள் நீங்கும் அல்லது தாக்கம்குறையும்.

குறிப்பாக சர்க்கரை வியாதி பாதித்து 5வருடங்களுக்கு மேல் ஆனாவர்கள்ஆயுர்வேத மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான்சர்க்கரை வியாதியால் வரும் சிக்கல்கள்குறையும்.

ஆயுர்வேத மூலிகை மருத்துவம்

ஆயுர்வேத மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் நேரில் வரமுடிந்தவர்கள் நேரில் வரலாம், அல்லதுபணம் அனுப்பி குரியரில் மருந்துகள்பெறலாம்.

குரியரில் மருந்துகள் பெறதொடர்பு கொள்ள பார்க்க