குறும்படம் எடுப்பவர்களுக்கு இப்போதைய ப்ரச்சனையே தற்கால சினிமாதான். பெரும்பாலான குறும்படங்கள் கமர்ஷியல் சினிமாவை ஒட்டியே இருக்கிறது. அதை மீறி நான்கைந்து குறும்படம் செய்த இயக்குனர்கள் திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் போது பத்து நிமிட குறும்படத்தையே மீண்டும் ரெண்டு மணி நேர படமாக்க நினைக்கிறார்கள். அங்கே தான் சறுக்குகிறார்கள். பத்து நிமிட குறும்படத்தில் கடைசியில் வரும் ட்விஸ்ட் சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஆனால் அந்த ஒரு டிவிஸ்ட் மட்டுமே நம்பி திரைப்படமாக்கும் போது நம்பினால் கை கொடுக்காது. எனவே குறும்பட இயக்குனர்கள் திரைப்பட வாய்ப்பு வரும் போது நல்ல கதைகளை தெரிந்தெடுத்து பண்ணினால் இன்னும் நல்ல தரமான படங்கள் வர வாய்ப்பு அதிகமென்று தோன்றுகிறது.
25 Feb 2014
24 Feb 2014
21 Feb 2014
14 Feb 2014
உறவுகளும் நட்பும்
உறவுகளும் நட்பும் இருக்கத்தான் செய்யறாங்க. ஆனா சொல்லிக்கற மாதிரி அதெல்லாம் சரியா எப்படி மெயிண்ட்டெயின் செய்யறதுன்னு தெரிய மாட்டேங்குது. தகவலும் தொடர்புமே வாழ்க்கையா இருக்கற இந்தகால ஒலகத்துல நூற்றுக்கணக்குல நண்பர்கள் லிஸ்டு ஆன்லைன்ல இருக்கறது மட்டும் ஒரு காலத்துக்கும் நம்மை வளப்படுத்தாதுங்க்ற உண்மை உறுத்துது.
9 Feb 2014
விளம்பரம் ங்கொய்யாலா...
இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. முன்னாடியெல்லாம் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை நிகழ்ச்சி மாறும் போதுதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ கால்மணி நேரத்துக்கு ஒருவாட்டி வந்துடுது. அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு. அதுலயும் சில விளம்பரங்கள் பண்ற அக்கிரமம் இருக்கே, தாங்க முடிலப்பா. ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், ஒரு கிரீம் போட்டுட்டு போனா வேலை கெடைக்கும்னு ஒரு வெளம்பரம், அவங்க பானத்தை குடிச்சா புள்ளைங்க ஒசரமா வளர்ந்துடும்னு ஒரு வெளம்பரம்..... என்ன கருமாந்திரம் சார் இது?
4 Feb 2014
3 Feb 2014
நாணும் சினிமா இயக்குனர்தான்
வசூல்லில் தோல்வியடையாதுவரை......
நான் விருதுக்காக படம் எடுக்கிறேன் ,சமுதாயத்தை திருத்த போகிறேன்,மெசேஜ் சொல்கிறேன் வேலையெல்லா எனக்கு கிடையாது 2.30மணி நேரம் கமர்சியல் படம் பட்டையை கௌப்பனும்.சாதாரண கதையை ,அருமையாக திரைக்கதை அமைத்து கொஞ்சம் காதல் ,காமெடி,செண்டிமெண்ட்,தேவைக்கு சண்டைணு ,படம் எடுத்தாலே ஒரு வசூல் திரைப்படம் கொடுக்க முடியும்.பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராம,ரசிகனின் நாடி பார்த்து படம் பண்ண தெரிந்தவர்களே இயக்குநர்கள். மக்கள் ரசனை மாறி வருகிறது என்பதை உணர்ந்தவன் ஜெயிக்கிறான் ,தன் மேத விலாசத்தைக்காட்ட நினைப்பவன் தோற்கிறான்.
போடா,,,,, நான் விட்டு கொடுக்கிறேன்
பிரச்சினை சிறியதாக இருக்கும்போதே அதை நாம் பேசித் தீர்ப்பதில்லை. அது பெரிதாகிய பின் அதை சாதாரண முறைகளில் பேசித் தீர்ப்பது சிக்கலாகி விடுகிறது.
நமது குறைகளை ஏற்றுக்கொண்டு நாம் மன்னிப்புக் கேட்பதில்லை. நாம் முரண்படும்போது முரட்டுத்தன சிந்தனைக்கு தயாராகி விடுகிறோம். அண்டி வாழும்போது அடிவருடிகளாகவும் மாறி விடுகிறோம். நாம் கேள்விப்படும் தகவல்களை பரிசோதித்துப் பார்ப்பதற்குப் பதிலாக அப்படியே நம்பி விடுகிறோம். வதந்தியை நம்பி முடிவெடுக்கிறோம், சொந்தங்களைக் கண்டிக்கிறோம். மரியாதை கொடுத்தால் தான் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். இவையெல்லாம் பிரச்சினை பெரிதாவதற்கு முக்கியக் காரணங்கள்.
பலவீனமானவர்களைச் சுரண்டும், பணக்காரர்களை அண்டி வாழும் நமது பலவீனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிவதில்லை. நமக்கும் பல நேரங்களில் மன்னிக்கும் குணத்தை விட பழி வாங்குவதே சரியென்று படுகிறது, நாமும் ஒருநாள் வயோதிகர்களாக மாறுவோம் என்பதை இன்றைய பொழுதுவரை நாம் மறுக்கிறோம். எதையும் எதிர்த்து மார் தட்டுகிறோம். இவையெல்லாம் நாம் சரியான மனிதனில் இருந்து நழுவி சராசரிகளில் ஒருவனாக வாழ்வதற்கு முக்கியக் காரணமாகிறது.
கூட்டமாக வாழ்வதுதான் மனித இயல்பு, அதனால்தான் நமது குடும்பங்களுக்கு வெளியிலும் நாம் நம் உறவைத் தேடுகிறோம். நண்பர்கள், உறவினர்கள் இருந்தால்தான் நமக்கு முழுமை உணர்வு கிடைக்கிறது. உறவைக் கவனமாகப் பாதுகாக்காவிட்டால் வாழ்வு கசந்துவிடும். உறவு பேணுவதை எப்படிச் செய்வது?
`எனக்கு முன்னால் நடக்காதே நான் பின் தொடரமாட்டேன். எனக்குப் பின்னால் நடக்காதே நான் வழிகாட்ட மாட்டேன். என்னோடு கூட நட, என் நண்பனாய் இரு', அறிஞர் ஆல்பர்ட் காம்யூவின் அற்புத வரிகள் இவை.
மனிதர்களுக்கு எப்போதுமே `தான்' என்ற அகங்காரம் உண்டு. அவனால் முன்னால் இருப்பவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது, பின்னால் வருபவர்களை அரவணைத்துச் செல்ல முடியாது. தனக்கு சமமாக நட்பு பாராட்டுபவனிடம் மட்டும் அவன் சாதுவாக இருக்கிறான். இதுவே மனித சுபாவம்.
மனிதன் இயல்பே இப்படி இருப்பதால் யாருமே அப்பழுக்கற்றவர் அல்ல. இருந்தாலும் நீங்கள் திறந்த மனதுடன் இருங்கள். அன்பாகப் பேசுங்கள். ஒவ்வொருவர் முன்னுரிமையும் வேறுபடும், எனவே ஒவ்வொருவர் உறவிலும் இடைவெளியும் பேணுங்கள். மனித உறவில் சூழ்ச்சி கூடாது. மற்றவரின் குறைகளை மன்னிப்பதால் பதிலுக்கு நாமும் மன்னிக்கப்படுவோம்.
"நீ அன்பாக இருப்பதாலும், இரக்கமாக நடந்து கொள்வதாலும் உன்னை பிறர் கோழை என்று எண்ணக்கூடும். இருந்தாலும் நீ அன்புடன் இரு'' என்று காந்திஜிசொன்னதைப்போல, நாம் உறவு பேணுவோம் . விட்டு கொடுத்துக் வாழ்வோம்். மனத்தளவிலும் உயர்வு பெறுவோம்.
2 Feb 2014
30 வயது பெண்களும்,40வயது ஆண்களும் அழகு-ஆய்வு முடிவு
பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
'ஆண்டிகள்தான்' அழகு!
மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி 'ஆன்டி ஹீரோ'வாக மாறினாங்களோ தெரியலை)
ஆண்கள் 40 வயதில் அழகு
இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.
அழகிற்கு காரணம் என்ன?
இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.
ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் - எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..