9 Feb 2014

விளம்பரம் ங்கொய்யாலா...

இப்பல்லாம் டீவின்ன உடனே சீரியல்கள் ஞாபகத்துக்கு வருதோ இல்லியோ, விளம்பரங்கள் தான் ஞாபகத்துக்கு வருது. முன்னாடியெல்லாம் அரைமணிநேரத்துக்கு ஒரு தடவை நிகழ்ச்சி மாறும் போதுதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ கால்மணி நேரத்துக்கு ஒருவாட்டி வந்துடுது. அதுவும் விளம்பரத்துக்கு மட்டும் டபுள் சவுண்டு வேற வச்சு. இவனுங்க ஓவரா பண்றதால நல்ல வெளம்பரங்கள் கூட பாக்கறதுக்கு எரிச்சலா இருக்கு. அதுலயும் சில விளம்பரங்கள் பண்ற அக்கிரமம் இருக்கே, தாங்க முடிலப்பா. ஒரு முட்டாய சாப்புட்டா அடுத்தவன் பொண்டாட்டி ஓடிவருவான்னு ஒரு வெளம்பரம், ஒரு கிரீம் போட்டுட்டு போனா வேலை கெடைக்கும்னு ஒரு வெளம்பரம், அவங்க பானத்தை குடிச்சா புள்ளைங்க ஒசரமா வளர்ந்துடும்னு ஒரு வெளம்பரம்..... என்ன கருமாந்திரம் சார் இது?


சோப்பு, சேம்பு, க்ரீம், டூத்பேஸ்ட், பனியன், ஜட்டி, சாக்லேட்டு, மிட்டாய், ஷேவிங் ரேசர்.... இது எல்லாத்துக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இதுல எதை நீங்க யூஸ் பண்ணாலும் உங்களுக்கு உடனே பிகர் செட்டாகிடும். அதுனால கல்யாணமானவங்க எல்லாரும் ரொம்ப ஜாக்கிரதையா இந்த பொருள்களை யூஸ் பண்ணுங்க சார்! .....உங்க Mind Voice எனக்கு கேட்கிறது இப்படியாவது செட்டாணா........?

No comments:

Post a Comment