16 May 2014

LOK SHABHA வாக்கு எண்ணிக்கை 16/5/2014.

தமிழகம்: 39 தொகுதிகள் - 845 வேட்பாளர்கள் - 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பரபரப்புPosted by: Mayura Akilan
Published: Friday, May 16, 2014, 8:24 [IST]
சென்னை: தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளில் பதிவான வாக்குகள் 42 மையங்களில் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த மாதம் 24 ம் தேதி நடந்த தேர்தலில் 73.67% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
State Set for Counting With 3-tier Security at All Centres

13626 போலீஸ் பாதுகாப்பு
42 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 13,626 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
12000 பணியாளர்கள்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 12,000 பேர் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை 62 பார்வையாளர்கள் மேற்பார்வையிடுகின்றனர்.
செல்போனுக்குத் தடை
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கைபேசி, மடிகணினி கொண்டு செல்லக்கூடாது என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
சென்னையில் பாதுகாப்பு
சென்னையில் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய பாராமிலிட்டரி படைகள், தமிழக ஆயுத படை வீரர்கள் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் ஆகியோர் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சக்கட்ட பாதுகாப்பு
ஒவ்வொரு வாக்கு மையமும் 800 காவல் துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதுடன் வீடியோ கண்காணிப்பும் இருக்கும்.
ரோந்துப்பணியில் போலீஸ்
நகரில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பலமாக இருப்பதுடன் தங்கும் விடுதிகள், லாட்ஜ்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்படுகிறது. காவல் துறை அதிகாரிகளின் ரோந்து பணியும் நடைபெறுகிறது.Story first published: Friday, May 16, 2014, 08:24 [IST]

No comments:

Post a Comment