29 Apr 2014

இந்தி மொழி முக்கியத்துவம்

இன்றைய நிலையில் தேசிய அளவிலான எல்லா தேர்வுகளின் கேள்வித் தாள்களும் இரு மொழிகளிலேயே அச்சிடப் படுகின்றன. முதன்மையாய் ஆங்கிலம், இரண்டாவது இந்தி. போட்டி தேர்வுகளில் இவ்விரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுவதால் அதிகம் பாதிக்கப் படுவது நம் தமிழக மாணவர்கள் மட்டும்தான். அதுவும் முக்கியமாக அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்று போட்டித் தேர்வுக்கு முயலும் மாணவர்கள்தான்.

எப்படி என்று கேட்பவர்களுக்கு. இந்தி நம் தேசிய மொழி . இந்தியா தனது அலுவலக மொழியாக மாநில வாரியாக இருபத்தி இரண்டு மொழிகளை ஏற்றுள்ளது. ஆங்கிலம் எல்லா மாநிலங்களிலும் இரண்டாம் மொழியாகப் பயன்படுத்தப் படுகிறது. இப்படி இருக்க ஏன் இந்தியில் மட்டும் கேள்வித்தாள் அச்சிட என்ன காரணம்.
இந்தியாவின் மொத்த மாநிலங்களில் வெகு சில தவிர மற்றவை இந்தி மற்றும் இந்தி சார்பு மொழிகளையே தாய் மொழியாகக் கொண்டுள்ளது. அந்த அனைத்து மாநிலங்களிலும் இந்தி மிக நெருங்கிய மொழி. வட மாநிலங்கள் அனைத்துக்கும் இந்தி இன்றியமையாதது. அதுபோல் தென் மாநிலங்களிலும் தமிழகம் தவிர இந்தி எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடம் ஆக்கப் பட்டுள்ளது.  இந்தி கற்காதவர்கள் நம்ம தமிழ்நாடு மாணவர்கள்  மட்டுமே.இப்படி இந்தியா முழுவதும்தமிழகம் தவிர்த்து  ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி கற்கப் படுகிறது என்றால் அது இந்திதான். இதன் காரணமாக தேர்வுத் துறைகளும் போட்டித் தேர்வுகளை தீர்மானிக்கும்போது பொதுவான மொழி என்ற வரிசையில் ஆங்கிலத்தை முதலிலும், இரண்டாவதாக இந்தியையும் தெரிவு செய்கிறது.
இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது, இந்தி என்பதும் சில மாநிலங்களை பொறுத்தவரை பயிற்று மொழி, பல மாநிலங்களுக்கு தாய் மொழி.எப்பொழுதோ போராடி இந்தியை வேண்டாம் என்று சொன்னது நீங்கதானே என்று கேட்பவர்களுக்கு. அது எப்படியோ போகட்டும் இந்த பதிவில் அதை பற்று நான் பேச விரும்பவில்லை. காரணம் எங்கு எனது நிலைப்பாடு பொதுவான போட்டித் தேர்வு என்று ஆனபிறகு   இந்தி கற்றால் என்ன தவறு.இந்தி மொழியிலும் தேர்வுக்கான கேள்விகள் ஆச்சிடப்படுவது அது  அவர்களுக்கு  எளிமையாக அமைந்து விடுகிறது.
இதற்க்கு மாற்று வழி என்று ஏதேனும் உண்டா..
முதல் வழி தேசிய அளவிலான அனைத்து போட்டித் தேர்வின் கேள்வித்தாள்களும் பொதுவான ஒரே மொழியிலேயே அச்சிடப் படவேண்டும். இந்தியாவில் நிலவும் பல மொழி நிலையில் இதற்க்கான சாத்தியம் ஆங்கிலத்தை பொதுவாய் தேர்ந்தெடுப்பது மட்டுமே..
இரண்டு : இந்தி தமிழகத்தில் கட்டாய கல்வி கொண்டுவரவேண்டும். தேர்வு நடத்தப்பட வேண்டும்.இதுவே சரியான நேர்மையான ஒரு போட்டித்தேர்வு நடத்த வழி ஆகும்.
 இப்படி நடக்கும்போது மட்டுமே அதில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் உண்மையாய் அவர்கள் திறமையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாய் அங்கீகரிக்கப்படுவர். அதுவரை அதன் முடிவுகள் அனைத்தும் ஒரு பெரும் கூட்டத்திற்கு(தமிழகத்துக்கு) இழைக்கப்பட்ட அநீதியாய் அறியப்படும்.

தமிழ் வழியில் கற்றவர்கள் எப்படி ஆங்கிலத்தில் தேர்வு எழுதுவது? நாம் இந்தி வேண்டாம் என்று கூறிவிட்டு ஆங்கிலம் கற்கிறோம்.ஆங்கிலம் நம்ம மொழியோ.

இந்தி எதிர்ப்பு நடத்தியவர்கள் எல்லாம் இந்தியில் புலமை பெற்று மத்தியில் பல சலுகைப்பெற்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள் இது நியாமா? இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழை அரசியலாக்குவது?

அதுமட்டும்யில்லாமல் தமிழக பாமரனுக்கும் பாரளுமன்றத்துக்கும் நேரடி தொடர்பு (இந்திதெரிவது) எப்போ இருக்கிதோ அப்பொழுது தமிழக அரசியலில் தவறான கட்சிகள் இருக்காது-mohan.

No comments:

Post a Comment