ஒரு பொருளை வாங்கும்போது ஒரு விஷயத்தை மட்டும் யோசிக்கணும். இதை வாங்குற பணத்தை நீ சேமிச்சா அது குறிப்பிட்ட நாளுக்கப்புறம் வளர்ந்து ஒரு மதிப்புல இருக்கும். அந்த எதிர்கால மதிப்பைவிட வாங்கற பொருள் இன்னிக்கு அதிக மதிப்பையோ, இல்லைன்னா அதுக்கு ஈடான உபயோகத்தையோ உனக்கு தருமான்னு பாரு. 'ஆமான்னா வாங்கு. இல்லேன்னா வாங்காதே!' செலவு செய்றதுக்கான சூத்திரம் இதுதான்!''
எனக்கு கிடைக்கிற சொற்ப சம்பளத்தில வாழ்க்கையில ஒரு பொருளையுமே வாங்க முடியாது போலிருக்கே'ன்னு கவலைப்பட்டுகிட்டு, செலவைப் பார்த்துப் பார்த்து செஞ்சு காசு சேர்கிறேன். ஆனா நீயோ,
'உலகத்துல இருக்கிற அத்தனை பொருளையும் நம்ம சம்பாத்தியத்துல வாங்கமுடியலையே'ன்னு கவலைப்பட்டுகிட்டு செலவு செஞ்சுகிட்டிருக்க! இந்த சேம்சங் மாடல் போன் Tap,இந்த டைப் செருப்பு,இந்த ப்ராண்ட் புடவை, பேன்ட், இதெல்லாம் போட்டாத்தான் உலகம் நம்மை மதிக்குமுன்னு ஒரு தப்பான எண்ணம் வேற உன் மனசுல இருக்கு.
வாழ்க்கையில எவ்வளவு பணம் சம்பாதிக்கிறேங்கிறது மேட்டரே இல்லை. எப்படி செலவை நிர்வாகம் பண்றேங்கிறதுதான் மேட்டர். ஏன்னா செலவைக் கட்டுப்படுத்தலேன்னா எவ்வளவு அதிகமா வரவு வந்தும் பிரயோஜனமில்லே!'' -என் பொண்டாட்டியே .....,
No comments:
Post a Comment