8 Apr 2014

மக்கள் கணணி மையம.்

வருவாய் துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, ஆதரவற்ற விதவை சான்று, சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டங்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகியலை ஆன்லைன் மூலம் கணினியில் வழங்கும் மின் ஆளுமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முதலில் செய்யாறு வட்டத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் அனைத்து வட்ட தலைமையிடத்திலும் தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியர் அலுவலகத்தை தேடி அலைய வேண்டியதில்லை.தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள கணினி மையத்திலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலோ உள்ள கணினி மையத்தில் அசல் ஆவணங்களுடன் மனு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். மனு செய்த 4 நாட்களுக்குள் அவர்கள் விண்ணப்பித்த சான்று மனு செய்த இடத்திலேயே கிடைத்துவிடும்.இந்த திட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டங்களும், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மக்கள் கணினி மையம் தொடக்க விழா திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட நொச்சிமலை ஊராட்சியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஜய் பிங்ளே தலைமை தாங்கினார்.தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கலந்து கொண்டு கணினி மையத்தை தொடங்கிவைத்தார். மேலும் இந்த திட்டத்தை கையாளும் கிராம நிர்வாக அலுவலர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்காக இன்டர் நெட் டேட்டா கார்டுகளையும் அவர் வழங்கினார். மேலும் இத்திட்டம் குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:சமூக நலத்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டங்களும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமும், மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள சஹாஜ் மக்கள் கணினி மையத்திலோ அல்லது தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திலோ இத்திட்டத்தின் பயனைப்பெற உரிய அசல் ஆவணங்களுடன் மனு செய்து கொள்ளலாம். இம்மனுவின் மீது வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் கோரிய உதவித் தொகை திட்டங்களுக்கு ஏற்பளிப்பார்கள். இத்திட்டத்திலும் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு சென்று எந்த அலுவலரையும் பார்க்க வேண்டியதில்லை. அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்.தமிழக அரசின் ஆணையின் படியும், தமிழ்நாடு மின் ஆளுமை திட்ட முகமையின் வழி காட்டுதலின் படியும் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட மின் ஆளுமைச்சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச்சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட மாவட்ட மின் ஆளுமை திட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த சேவைகள் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் கோரும் சான்றுகள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அரசு அலுவலகங்களைச் தேடிச் சென்று சேவைகளைப் பெறும் நிலையை மாற்றி இனி அரசாங்கத்தின் சேவைகள் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.வருவாய்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் வருமானச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச்சான்று முதல் பட்டதாரி சான்று மற்றும் கணவனால் கைவிடப்பட்ட சான்று ஆகியவை ஆன்லைன் மூலமாக கணினியில் வழங்கும் திட்டம் செய்யார் வட்டத்தில் கடந்த 05.01.2013 அன்று தொடங்கப்பட்டது. பின்பு இத்திட்டம் விரிவாக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலுல் உள்ள தலைமையிடத்து மண்டலத்தில் 18.02.2013 முதல் தொடங்கப்பட்டு நடைமுறைப்படத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 01.03.2013 நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 01.03.2013 வரை சுமார் 1500 விண்ணப்பங்கள் வரப்பெற்று உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 01.04.2013க்குள்இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டம் நடைமுறைபடுத்துவதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் ஆகியோர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மண்டல துணை வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் இச்சான்றுகளை மின் கையொப்பம் மூலம் முடிவு செய்வார்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தமிழக அரசு வழங்கிய மடிக்கணினியிலேயே இணைய தளம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள டேட்டா கார்டு வழங்கப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள சஹாஜ் மக்கள் கணினி மையத்திலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கணினி மையத்திலோ அசல் ஆவணங்களுடன் மனு செய்து ஒப்புகை பெற்றுக்கொள்ள வேண்டும். மனு செய்த 3 அல்லது 4 பணி நாட்களுக்குள் அவர்கள் விண்ணப்பித்த சான்று மனு செய்த இடத்திலேயே கிடைத்துவிடும் இதனால் பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளைப் பெற இனி கிராம நிர்வாக அலுவலரையோ, வருவாய் ஆய்வாளரையோ, வட்டாட்சியரையோ நேரில் சென்று பார்க்க வேண்டியதில்லை. இதனால் பொதுமக்களுக்கு நேரம் மற்றும் அலைச்சல் குறையும். இத்திட்டத்தினால் வட்டாட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் இல்லாமல் போவதுடன் காகிதமில்லா அலுவலகமாக மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் மனுக்களை பெற சுமார் 200 மக்கள் கணினி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் இம்மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் ஏ.கே. அரங்கநாதன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஏ.கே.குமாராசாமி, மின் ஆளுமை திட்ட ஆலோசகர் தினேஷ், ஊராட்சி மன்ற தலைவர் கோபி (எ) ஏழுமலை, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டன

No comments:

Post a Comment