25 Feb 2016

INDIAN MEDICAL COUNCIL

மருத்துவ கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் மட்டும்தான் மருத்துவ பயிற்சி அளிக்க முடியும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில் (INDIAN MEDICAL COUNCIL).

சித்த மருத்துவ கல்வியை அங்கிகரிக்க இருக்கிறது இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் குழு (CENTRAL COUNCIL FOR INDIAN MEDICINE).

தமிழகத்தில் மருத்துவ கல்வியை அங்கிகரிக்க வேண்டியது டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் (DR. MGR MEDICAL UNIVERSITY).

தொலைநிலை கல்வியை அங்கிகரிக்க வேண்டியது மத்திய அரசின் தொலைநிலை கல்விக்குழு (DISTANCE EDUCATION COUNCIL).

தனி பல்கலை வேண்டும்: சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் போர்க்கொடி

7/5/2011

0 Comments

 

    "தங்களுக்கு தனி பல்கலை அமைக்க வேண்டும்' என, சித்த, ஆயுர்வேதம் 
  உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறை டாக்டர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர். 
     தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை நிர்வாகம்,   சித்த, ஆயுர்வேத மருத்துவத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என்றும்   குற்றம் சாட்டுகின்றனர். இதனால், சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் - அலோபதி   டாக்டர்கள் இடையே நீர் பூத்த நெருப்பாக இருந்த மோதல், மீண்டும் புகையத்   துவங்கியுள்ளது. 
    சித்த, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைப்படி   மருத்துவம் செய்பவர்கள், "அலோபதி' எனப்படும் ஆங்கில முறைப்படி சிகிச்சை அளிக்கக் 
கூடாது. மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தில், இதை அனுமதிக்கும் விதிகளை ரத்து செய்ய 
வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம், மாநில சுகாதாரத் 
துறை செயலர் கிரிஜா வைத்தியநாதனை சமீபத்தில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். 
        சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் பட்டம் படித்தவர்கள், ஊசி போடலாமா, "ஸ்டெத்தஸ்'கோப்  வைத்துக்கொள்ளலாமா, இங்கிலீஷ் மருந்துகளை எழுதிக் கொடுக்கலாமா என்பதே இப்போது   பூதாகரமாக எழுந்துள்ள கேள்வி. "கூடாது' என்பது, எம்.பி.பி.எஸ்., படித்த   டாக்டர்களின் வாதம்; "சட்டத்தில் இடம் உள்ளது; அனுமதிக்கலாம்' என்பது சித்த, ஆயுர்வேத மருத்துவர்களின் வாதம். 
        கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் வேட்டையாடப்பட்டனர். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு, கிளினிக் நடத்திய கம்பவுண்டர்கள், நாட்டு மருத்துவர்கள், கூட்டம் கூட்டமாக கைது   செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 2,000 பேரில், முறைப்படி கல்லூரிகளில்  படித்து பட்டம் வாங்கிய சித்த, ஆயுர்வேத மருத்துவர்களும் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஆங்கில மருத்துவ (அலோபதி) முறை மூலம் சிகிச்சை அளித்ததாக குற்றம்   சாட்டப்பட்டது. 
    சித்த, ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகள் , நியாயம் கேட்டு   கோர்ட்டுக்குச் சென்றனர். "நாங்கள் கல்லூரிகளில், ஆங்கில மருத்துவ முறைகளைப்   படிக்கிறோம். எனவே, அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க   எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,   "பட்டம் படித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை   அளிக்கலாம், ஏன் அறுவை சிகிச்சை கூட செய்யலாம்' என்று பச்சைக் கொடி காட்டினர். 
அதேவேளை, இந்திய டாக்டர்கள் சங்கமும் கோர்ட்டுக்குச் சென்று, இந்த 
 தீர்ப்புக்குத் தடை உத்தரவு பெற்றது. 
    இதன் தொடர்ச்சியாக, சித்த, ஆயுர்வேதம்,யுனானி  உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ பட்டப் படிப்பில் உள்ள ஆங்கில மருத்துவ முறைபாடத்  திட்டத்தில் சில பகுதிகளை நீக்க, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவபல்கலை  உத்தரவிட்டது. ஆனால், பாடத்திட்டத்தை நீக்க, இந்திய முறை மருத்துவத்துக்கான   மத்தியக் குழு ஆட்சேபித்ததால், பாடத் திட்டத்தை நீக்கும் முடிவை தற்காலிகமாக   ஒத்திவைத்துள்ளது பல்கலை. மருத்துவ பல்கலையின் நடவடிக்கை, இந்திய மருத்துவ முறை   டாக்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்த, ஆயுர்வேத மருத்துவம்   படித்துவிட்டு அலோபதி மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பது சரியா என்று சித்த   மருத்துவர் சிவராமனிடம் கேட்டபோது, "எப்போதாவது அவசர நிலையில், அலோபதி மருத்துவ   முறையில் சிகிச்சை அளிக்க நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம். ஆனால், அதையே வழக்கமாக  கொள்ளக் கூடாது. அதற்காக, "ஸ்டெத்தஸ் கோப்' வைத்துக் கொள்ளக் கூடாது, "தெர்மா  மீட்டர்' கூடாது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. "ஸ்டெத்தஸ்கோப்',"ஸ்கேன்',  "எக்ஸ் ரே' போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை ஒரு குறிப்பிட்ட மருத்துவத்தினர்  மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது' என்றார். 
    பாடத் திட்டத்தை  நீக்குவது குறித்து, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய குழு உறுப்பினர்  முத்துக்குமாரிடம்கேட்டபோது,"உடற் கூறுயியல், மருந்தியல், நோய்க்குறி குணங்கள்  என்பன உள்ளிட்ட பாடத் திட்டங்கள் எல்லா மருத்துவத்துக்கும் பொதுவானது. வருங்காலத்தில் ஒருங்கிணைந்த மருத்துவம்தேவைப்படுவதால் அடிப்படை விஷயங்களை  கற்றுக்கொள்வதில் தவறில்லை. பாடத் திட்டத்தில் 
மாற்றம் செய்ய பல்கலைக்கு  அதிகாரமில்லை. கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ 
பல்கலைக்கழகம் சித்த, ஆயுர்வேதம் போன்ற  மாற்று மருத்துவத்தினரிடம் மாற்றாந்தாய்மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. எனவே, எங்களுக்கு தனியாக பல்கலை வேண்டும்' என்றார். 
    தமிழ்நாடு மருத்துவ  கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறும்போது, "மாற்று மருத்துவத்தை குறைத்து  மதிப்பிடவில்லை. சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்தக் காலத்துக்கு ஏற்ப  மேம்படுத்த வேண்டியது எவ்வளவோ உள்ளது. அதைச் செய்யாமல் அலோபதி மருத்துவத்தில்  ஆர்வம் காட்டுவது எங்களுக்கும் பிரச்னை, அவர்களுக்கும் பிரச்னை' என்றார். 

பல்கலையை கேள்வி கேட்க யாருக்கும்அதிகாரம் இல்லை:
சித்த, ஆயுர்வேத  மருத்துவர்களின் குற்றச்சாட்டு குறித்து, மருத்துவ பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன்  கூறியதாவது: இந்திய மருத்துவமுறைகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து, அலோபதி  பாடங்களை நீக்கியதாககூறப்படுவதில் துளியும் உண்மை இல்லை. தேவைக்கேற்ப, பாடத்  திட்டத்தில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது வழக்கமான நடைமுறை தான். இதற்காக தனி  குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் தான் முடிவு செய்யும். ஆனால், பல்கலையின்  அதிகாரம் குறித்து கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சித்த, ஆயுர்வேதம்  உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை டாக்டர்களிடம், ஒருபோதும் நான் மாற்றாந் தாய்  மனப்பான்மையுடன் நடந்து 
கொள்ளவில்லை. எல்லோரையும் சமமாகவே பாவிக்கிறேன். தனி பல்கலை  கேட்பது அவர்களது உரிமை. கடந்த ஆட்சியில் இது கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேட்டுப் பெறட்டும்; வாழ்த்துகள்! இவ்வாறு மயில்வாகனன் கூறினார். 
- நமது 
சிறப்பு நிருபர் - 

பதிவுச் சான்றிதழ் கிடைக்காமல் அவதிப்படும் சித்த மருத்துவர்கள்

Updated: July 25, 2015 11:12 IST

தமிழ்முறைப்படி மருத்துவத் தொழிலில் ஈடுபடும் சித்த மருத்துவர்கள் சுமார் 4 ஆயிரம் பேர் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், தொழில் செய்வதற்கான பதிவுச் சான்றிதழ் எப்போது கிடைக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது. இப்பிரச்சினையை அரசு பார்வைக்கு கொண்டு செல்ல வழிவகை செய்யுங்கள்’ என்று ‘தி இந்து’ ‘உங்கள் குரல்’ மூலம் கேட்டுக் கொண்டார் தாராபுரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் கிருஷ்ணன்.

இவர், தமிழ்ப் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைப்பு பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலச் செயலாளராகவும் உள்ளார். அவர் கூறியதாவது:

1971-ம் ஆண்டு சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோ உள்ளிட்ட மருத்துவ முறைகளை இந்திய மருத்துவக்கழக ஆளுமையின் கீழ் கொண்டு வந்தது அரசு. அப்போதைக்கு இந்த தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் சிலர் விண்ணப்பித்து, ஆர்ஐஎம்பி என்ற சான்றிதழை பெற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு தொழில் செய்வதற்குரிய அனுமதி வழங்கும் சான்றிதழ் நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்திய மருத்துவக் கழகத்தின் உறுப்பினர்களே சான்றிதழ்களை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு சட்டம் இயற்றினால் ஒழிய அதை கொடுக்க இயலாது என்று அதன் தலைமை அறிவித்துவிட்டது. இதனால் ஒரு சில மாநிலங்களில் உள்ள நாட்டுப்புற மருத்துவர்களுக்கு ‘எல்லீஸ்மென்ட் சான்றிதழ்’ ஒன்றை அந்தந்த அரசுகள் வழங்கின. தமிழ்நாட்டில் இத்தகைய சான்றிதழை 1988-ம் ஆண்டு அளித்தனர். கிராமப்புறங்களில் பரம்பரை பரம்பரையாக வைத்தியம் செய்து வந்த பலருக்கும் இந்த தகவல் எட்டவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சான்றிதழ்கள் கிடைத்தன. சான்றிதழ் இல்லாமல் தமிழ்நாட்டில் தொழில்முறை சித்தா மருத்துவர்கள் 3 ஆயிரம் பேர் முதல் 4 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் பல்வேறு சித்த மருத்துவர் சங்கங்களில் உள்ளனர்.

தமிழக சுகாதாரத் துறை செயலராக சுப்புராஜ் பொறுப்பு வகித்தபோது, பரம்பரை சித்த மருத்துவர்கள் அனைவரின் பெயரும் பதிவு செய்து சான்றிதழ் அளிப்பதாகக் கூறினார்.

1997-ம் ஆண்டு ‘தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம்’ என்ற ஒன்றை அரசு அமைத்தது. அதன் மூலம் சித்த மருத்துவர்கள் நலன் பாதுகாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழக சித்த மருத்துவர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரசு அதை சித்த மருத்துவ மன்றத்துக்கு அனுப்பி, அங்கிருந்து அரும்பாக்கத்தில் உள்ள இந்திய ஹோமியோபதி மருத்துவகத்துக்கு அனுப்பப்பட்டது. பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவருக்கும் அங்கிருந்து அடையாள அட்டை வழங்கப்படுவதாக 2 மாதங்களுக்கு முன்பு தகவல் வந்துள்ளது.

எனினும், இதுவரை தமிழகத்தில் எந்த சித்த மருத்துவர்களுக்கும் பதிவு அடையாள அட்டை வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தந்த பகுதி விஏஓ, ஆர்ஐ, தாசில்தார் மூலமாக பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டு, அதன் மூலம் ‘சித்த மருத்துவர்’ என்ற பதிவு அட்டையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

17 Feb 2016

வாத வலிகளை குணப்படுத்தும் புன்னை

posted by sudar24 July 29, 2015 ஆரோக்கியம்

புன்னை ஒரு மரவகையைச் சேர்ந்தது. இது சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த பெரிய பச்சையான பளபளப்பான இலைகளையும் உருண்டையான உள் ஓடு உள்ள சதைக் கனிகளையும் உடைய பசுமையான மரம். இதன் இலை, பூ, விதை, பட்டை மற்றும் எண்ணெய் ஆகியன பயன் தருபவை.

ஒரு மரத்தின் காய் 100 கிலோ கிடைக்கும். அதில் 18 கிலோ எண்ணெய் கிடைக்கும். ஜோதிடத்தில் ஆயில்ய நட்சத்திரத்திற்குரிய மரம் புன்னை. இது நோயை குணமாக்கும் மரமாக விளங்கியுள்ளது. புன்னை கோயில்களிலும் வளர்க்கப்படுகிறது. புன்னை மரம் வலுவானது. இந்த மரத்தில் படகுகள் செய்வார்கள். வீடுகள் கட்டவும் பயன்படுத்துவார்கள்.

புன்னை சளி, ஒற்றைத் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாத நோய், தோல் வியாதி, வயிற்றுப் புண், வெட்டை, மேகப்புண், சொறி சிரங்கு குஷ்டம் ஆகியவைகளைக் குணப்படுத்தும். பூவை அரைத்துச் சிரங்கிற்குப் போடலாம். இலையை ஊறவைத்த நீரில் குளித்து வர மேகரணம், சொறி, சிரங்கு யாவும் மறையும். பூவை நிழலில் உலர்த்தித் தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை கொடுத்து வர டைபாய்டு நோய் தீரும்.

புன்னை எண்ணெய் பூசி வர மகாவாத ரோகம் முன் இசைவு, பின் இசைவு, கிருமி ரணம் சொறி சிரங்கு, குட்டரோகப் புண்கள் தீரும். புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட முடக்கு வாதம், கீல்வாயு, வாதவலிகள் தீரும். புன்னையின் இலைகள் பூக்கள் மற்றும் பட்டையை அரைத்துப் பவுடராக்கி தினம் ஒரு வேளை கொடுக்க மூட்டுவலி, சொறி, சிரங்கு குஷ்டம் மேகம் ஆகியவை குணமாகும்.


எலும்பு முறிவை குணமாக்கும் எலும்பொட்டி செடி

posted by sudar24 August 4, 2015 ஆரோக்கியம்

எலும்பொட்டி செடி வகையைச் சேர்ந்தது. இது வளமான மண்ணில் நன்கு வளரும். மிதமான சீதோஸ்ணம் போதுமானது. இது பற்றி பழங்காலத்தில் கிராமங்களில் எலும்பு முறிவை குணமாக்கும் என்று தெறிந்து வைத்து அதை இரகசியமாக வைத்திருந்தனர். இந்தச் செடி எப்போதும் பச்சையாக இருக்கும்.

இதன் தண்டுகள் முதிர்ந்தால் கெட்டியாகிவிடும். பூக்கள் மஞ்சள் அல்லது வெண்மையாக இருக்கும். பூக்கள் வாடினால் பசை போன்று இருக்கும். இதில் கால்சியம் அதிகமாக இருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதத்தில் பூக்கும்.

மருத்துவப் பயன்கள் :– எலும்பொட்டி செடியில் கால்சியம் அதிகமாக இருப்பதை தற்போது கண்டறிந்துள்ளார்கள். அதை எலிகளுக்குக் கொடுத்து அதன் எலும்பு முறிவை விரைவில் குணமாவதைக் கண்டறிந்தார்கள். அந்தக் காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இதன் இலையை நன்கு அரைத்து அதை அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டி விரைவில் குணமாவதைக் கண்டறிந்தனர்.

இதனால் இதற்குக் காரணப்பெயராக அமைந்தது. இதன் சமூலத்தில் சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் விட்டு நன்கு சுண்ட வைத்து அதன் ‘எக்ஸ்ட்ராக்’ எடுத்து வடிகட்டி, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணையில் கலந்து பாட்டிலில் வைத்துக் கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இரு லேசான மூங்கில் தப்பையில் வெள்ளைத் துணிசுத்தி கட்டுப்போடுவார்கள்.

பின் அதன் மீது இந்த மருந்தை நனைத்துக் கொண்டிருப்பர். இப்படி செய்யும் போது ஒரு சில மாதங்களில் அடிபட்ட இடம் குணமடைந்து விடும். இது கேராளாவில் முட்டிகுளக்கரையில் செய்து வருகிறார்கள்.


சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க வழிகள்

posted by sudar24 August 7, 2015 ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும். குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அவசரப்படுத்தவே கூடாது. உணவு உண்ணும் நேரம் அவர்களுக்குச் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டவே கூடாது. மற்றவர்களோடு அமர்ந்து, அவர்களாகவே சாப்பிட விடவேண்டும். சாப்பாட்டை மேலே, கீழே இறைத்தாலும், குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடுவார்கள். பழங்கள், காய்கறிகள், முழு பயறு வகைகள், பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் இவை தடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் தண்ணீராவது குழந்தைகளை அருந்த வையுங்கள். வெறும் தண்ணீராகக் குடிக்க அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், பழச்சாறாகவோ, பானகமாகவோ, மோராகவோ, மில்க் ஷேக்குகளாகவோ, இளநீராகவோ கொடுக்கலாம். ‘காய்கறிகளை சாப்பிடவே மாட்டேன் என்று அலறும் குழந்தைகளுக்கு காய்களை அப்படியே கொடுக்காமல், சாண்ட்விச்சுகளாகவோ, காய் நூடுல்ஸாகவோ, ஃப்ரைட் ரைஸாகவோ கொடுங்கள்.

பட்டாணியை வேக வைத்து மசித்தோ, கேரட், பீட்ரூட் போன்றவற்றைத் துருவி தூவியோ, உங்கள் அயிட்டங்களை கலர்ஃபுல்லாக பரிமாறுங்கள். அப்புறம் பாருங்கள், சந்தோஷமாகச் சாப்பிடுவார்கள். ஒரே பழத்தை முழுதாகக் கொடுப்பதைவிட, பல பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, பால், தேன் கலந்து சாலட்டாகவோ, மில்க் ஷேக்குகளாகவோ கொடுத்தால் வைட்டமின், மினரல், நார்ச்சத்து எல்லாம் ஒரே உணவில் அவர்களுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும்போது செயற்கையான மணம், நிறம் சேர்க்கப்பட்ட தின்பண்டங்களை வாங்கித் தராதீர்கள். காபி, டீ, குளிர் பானங்கள் போன்றவை குழந்தைகளின் முழு சிஸ்டத்தையே குலைக்கக் கூடியவை. தவிர்த்து விடுங்களேன்! எந்த உணவிலும் முடிந்தவரை சர்க்கரையை தவிர்த்துவிட்டு, பனை வெல்லம், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றைச் சேர்த்துக் கொடுத்துப் பழக்குங்கள்.

அவ்வளவும் இரும்புச்சத்து! உடல்நிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, நீர்க்க இருக்கும் சூப் அல்லது ரசம் பிசைந்த சாதம், வேகவைத்த காய் என சீக்கிரம் செரிக்கும் உணவுகளைக் கொடுங்கள். காரம், மசாலா வேண்டாம். தண்ணீர் நிறையக் கொடுக்கலாம். அப்போது தான் மாத்திரை, மருந்தினால் உடலில் படிந்த நச்சுக்கள் வெளியேறும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!!!

posted by sudar24 August 12, 2015 ஆரோக்கியம்

தண்ணீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் என்ன நடக்கிறது என்று தெரியுமா? ஆராய்ச்சி ஒன்றில், ஜப்பானிய மக்கள் இந்த சிம்பிளான செயலை அன்றாடம் பின்பற்றி வருவதால் தான், அவர்களுக்கு எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தொற்றுவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த சிம்பிளான செயலை அன்றாடம் பின்பற்றுவதன் மூலம், எடையைக் கூட குறைக்கலாம். மேலும் ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல், ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைக்கலாம். இந்த வழியைப் பின்பற்றும் போது மேற்கொள்ள வேண்டியவைகள்:

* காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவி, பற்களை துலக்கும் முன் 1 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

* பற்களைத் துலக்கிய பின் 45 நிமிடங்கள் வரை எந்த ஒரு பானத்தையும் அல்லது உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

* தண்ணீர் குடித்து 45 நிமிடங்களுக்குப் பின் காலை உணவை உட்கொள்ள வேண்டும்.

* காலை உணவை உண்ட பின், 2 மணிநேரத்திற்கு எந்த ஒரு உணவுப்பொருளையும் அல்லது பானத்தையும் எடுக்கக்கூடாது.

காலை உணவிற்கு 2 மணிநேரத்திற்கு பின் எப்போதும் போன்று செயல்படலாம். இங்கு இப்படி தினமும் பின்பற்றி வந்தால், என்ன நன்மைகளை நாம் பெறலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம்
ஒருவர் தொடர்ந்து 30 நாட்கள் இந்த செயல்முறையை பின்பற்றுவதன் மூலம், அவரது இரத்த அழுத்தம் சீரான முறையில் இருப்பதை நன்கு காணலாம்.

வாய்வு பிரச்சனை
10 நாட்கள் இந்த செயல்முறையை பின்பற்றினால், வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். மேலும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், நீரில் உள்ள சத்துக்கள், வயிற்றுப் படலத்தில் உள்ள பிரச்சனையை சரிசெய்துவிடும்.

நீரிழிவு
தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் இன்சுலின் அளவு சீராகிவிடும். இதனால் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கல் பிரச்சனையால் நீண்ட நாட்கள் அவஸ்தைப்பட்டு வந்தால், அதற்கு ஓர் முக்கிய காரணம் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான். ஆகவே இந்த செயல்முறையை தினமும் தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் பத்தே நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் தவிர்த்திடலாம்.

புற்றுநோய்
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆனால் உண்மையில் மேற்கூறிய செயல்முறையை அன்றாடம் பின்பற்றி வருவதன் மூலம், புற்றுநோய் 180 நாட்களில் முற்றிலும் குணமாகிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காசநோய்
டிபி என்னும் காசநோய் இருப்பவர்கள், வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், 90 நாட்களில் காசநோய் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

சோர்வு
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதான் முலம், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

எடை குறையும்
எடையைக் குறைக்க தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும். அதிலும் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம், உடல் எடை விரைவில் குறைவதை நன்கு காணலாம். முக்கியமாக தண்ணீர் அதிகம் குடித்தால், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும்.

இதயத்திற்கு நல்லது
தண்ணீர் இதய நோய்களைக் குணப்படுத்த உதவும். அதிலும் தண்ணீரை வெறும் வயிற்றில் அதிகாலையில் குடித்து வந்தால், இதயத்தில் இரத்த அழுத்தம் சீராக இருந்து, இதய நோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம்.

டாக்ஸின்களை நீக்கும்
காலை உணவிற்கு முன் குறைந்தது 1 அல்லது 2 டம்ளர் தண்ணீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்கள் வெளியேறிவிடும். இதனால் சருமம் பொலிவோடு காணப்படும்.

உறுப்புகளுக்கு நல்லது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலின் மிக முக்கிய உறுப்புகள் ஈரப்பதமூட்டப்பட்டு, அவற்றின் இயக்கம் சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்,.

சருமத்திற்கு நல்லது
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், கரும்புள்ளிகள், பருக்கள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் சுத்தமாகவும், பளிச்சென்றும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.


கல்லீரல் நோய்

posted by sudar24 August 17, 2015 ஆரோக்கியம்

நாம் அறிந்த கொடிய நோய்கள் எல்லாவற்றையும் விட இது கொடுமையான நோய் என்கிறார்கள். இது எய்ட்சைவிட 100 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றும் பயமுறுத்து கிறார்கள். அதன் பெயர் ஹெபடைட்டிஸ் ‘பி’ என்ற வைரஸ் கிருமி. ஆண்டுக்கு 14 லட்சம் பேருக்கு ஹெபடைட்டிஸ் ‘ஏ’ தொற்று ஏற்படுகிறது.

2.4 கோடி பேர் ஹெபடைட்டிஸ் ‘பி’ கிருமி தொற்றுடன் வாழ்கிறார்கள். 7.8 லட்சம் பேர் இறக்கிறார்கள். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி, இ கிருமிகளால் லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஹெபடைட்டிஸ் கல்லீரலில் ஏற்படக்கூடிய அழற்சியை குறிக்கும். இது ஒரு கட்டத்துக்குள் இருந்துவிடாமல் கல்லீரல் சுருக்கம், தழும்பு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மேலும் கல்லீரல் செயல் இழப்பு, கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படலாம். கல்லீரலைப் பாதிக்கும் வைரஸ் கிருமிகள் நிறைய உள்ளன.

இதன் வகைகள் ‘ஏ’யில் தொடங்கி ‘ஜி’ வரை சென்று விட்டது. இந்த வரிசையில் மிக மோசமானது ‘பி’ மற்றும் ‘சி’ தான் உலகில் லட்சக்கணக்கானவர்களுக்கு கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட ‘பி’ ‘சி’ யே காரணமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரின் ரத்தம், சரியாக சுத்தப்படுத்தப்படாத ஊசி உள்ளிட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளை பயன்படுத்து வதாலும் பரவுகிறது. கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கும், உடலுறவு மூலமும் பரவுகிறது.

அதனால் தான் கர்ப்பிணிகள் ரத்தப்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். பரிசோதனையில் பி அல்லது சி வைரஸ் இருப்பது தெரிய வந்தால் சிசுவுக்கு இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண்ணும் தனியாக ஹெபடைட்டிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றை தடுக்க, குழந்தை பிறந்ததும் ஹெபடைட்டிஸ் ‘பி’ தடுப்பூசி போட வேண்டும். இதை எல்லா வயதினரும் போட்டுக்கொள்ளலாம்.

பாதுகாப்பற்ற ரத்தம் பெறுதலை தவிர்க்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவு மற்றும் தண்ணீர் மூலம் ஹெபடைட்டிஸ் ‘ஏ’ மற்றும் ‘இ’ வைரஸ் பரவாமல் இருக்க தனி நபர் சுகாதாரம் அவசியம். நோய் உள்ளவர்கள் உணவை சமைக்கும் போதோ, பரிமாறும் போதோ அது மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. எனவே சுத்தம் மிக, மிக அவசியம்.