17 Feb 2016

குடல் புண்ணை குணமாக்கும் எழுத்தாணிப் பூண்டு

posted by sudar24 August 25, 2015 ஆரோக்கியம்

இதன் வேறு பெயர் – முத்தெருக்கன் செவி. பயன்தரும் பாகங்கள் – செடியின் இலை மற்றும் வேர். எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி. எல்லா வளமான இடங்களிலும் வளரும்.

நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கும் செய்கிறது. தமிழ் நாட்டில் எங்கும் காணப்படும். எழுத்தாணிப்பூண்டின் இலைகள் 5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக மலம்போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும்.

சீதபேதி குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும். இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பரு, பிளவை ஆகியவை தீரும்.


No comments:

Post a Comment