14 Feb 2016

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள்

posted by sudar24 October 7, 2015 ஆரோக்கியம்

அந்தரங்க சமாச்சாரங்களில் இருக்கும் தெளிவு, ஆண்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது இல்லை. சில அறிகுறிகளை வைத்தே சில நோய்கள் நம்மை நெருங்குகிறதா என அறிந்துக்கொள்ளலாம். முளையிலேயே கிள்ளி எரிய வேண்டியதை வளரவிட்டு வேதனை படாமல் இருக்க ஆண்கள் அந்தரங்க சமாச்சாரங்களின் காரணங்களினால் ஏற்படும் நோய்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

கிளமீடியா (Chlamydia) :

கிளமீடியா ஒரு வகையான பாக்டீரியல் பாலுணர்வு நோயாகும். இது இந்நோய் உள்ள ஒருவருடன் உடல் சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது பரவுகிறது. தவறான உடல் சேர்க்கையினால் ஏற்படும் மிக பொதுவான பொய்யாக கிளமீடியா கருதப்படுகிறது. இந்நோய் வந்ததற்கான அறிகுறிகள், ஆணுறுப்பில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், விறைக்கொட்டைகளில் வீக்கம் போன்றவை ஆகும். சில சமயங்களில் இது பூரணமாக குணமாகாதப் போதிலும். இதன் அறிகுறிகள் நின்றுவிடும். எனவே, சரியான மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

மேக வெட்டை நோய் (Gonorrhoea) :

மேக வெட்டை நோய், இதுவும் தவறான உடல் உறவினால் ஏற்படும் பாக்டீரியல் தொற்றுநோய் தான். இந்த நோய்க்கு அறிகுறியென எதுவும் இருக்காது. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுவதாக கருதப்படுகிறது. இந்த நோய் காரணமாக விரைப்பை வீக்கம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அதன் நிறம் மஞ்சளாக போகும். இந்த நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது கிளமீடியா நோயும் சரியாகிவிடும். ஏனெனில் பொதுவாக கிளமீடியாவும், மேக வேட்டை நோய் ஒன்றாகத் தான் தோன்றும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எச்.ஐ.வி (H.I.V) :

தவறான உடல் சேர்க்கையினால் ஏற்படும் மிக மோசமான உயிர்கொல்லி நோயாக உலகம் முழுவதும் கருதப்படுவது எச்.ஐ.வி நோய். ஆண், பெண் பிறப்புறுப்புகளில் தவறான உடல் சேர்க்கையினால் உருவாகும் இந்நோய்க்கு இந்நாள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நோய்க்கு அறிகுறிகள் என சொல்லப்படுவது, அடிக்கடி காய்ச்சல் வருவது, உடல் எடை திடீரென குறைவது போன்றவை ஆகும். இந்நோயின் தாக்கம் வெளியே தெரியவே 1௦ வருடங்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹெர்பீஸ் (Herpes) :

ஹெர்பீஸ் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். மிகவும் வலி ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கம் ஏற்படும் போது எந்த அறிகுறிகளும் காட்டாது என்ற போதிலும். இது உடலில் பரவிடும் போது, ஆண் உறுப்பு, புட்டம், விதைப்பை, சிறுநீரகப் பகுதிகளில் கொப்புளங்களும், புண்களும் ஏற்படும். ஹெர்பீஸ் முத்த பரிமாற்றத்தினால் கூட பரவ வாய்ப்புகள் உள்ளதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் பரவும்போது இதழ்களில் புண் ஏற்படும். மேலும் இதை குணப்படுத்துவது கடினம் என்றும், வாழ்நாள் முழுக்க ஆன்டி-வைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டயாம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

பிறப்புறுப்பில் மருக்கள் (Genital Warts) :

Human Papillomavirus infection எனும் தொடரின் மூலம் பரவும் நோய் தான் Genital Warts எனப்படும் பிறப்புறுப்பில் உருவாகும் மருக்கள் நோய். இவை, பிறப்புறுப்பு மட்டுமில்லாமல் புட்டத்திலும் தொற்று ஏறப்பட வாய்ப்புகள் உள்ளன. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம். Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2015/8-stds-men-should-know-about-007503.html#slide38950 எனவே, ஆண்கள் இதுப்போன்ற உடலுறவு சார்ந்த நோய்களில் வருடத்திற்கு ஒருமுறையாவது சரியான உடல் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.


No comments:

Post a Comment